மாலியில் 5 இந்தியர்கள் கடத்தல் – அல்-கொய்தா பயங்கரவாதிகள் அட்டூழியம்! மீட்பு பணியில் இந்தியா தீவிரம்!

0220.jpg

பமாக்கோ:
ஆப்பிரிக்க நாடான மாலியில் அல்-கொய்தா தொடர்புடைய பயங்கரவாதிகள் 5 இந்தியர்களை கடத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இந்திய அரசு அவர்களை மீட்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

மாலியின் மேற்குப் பகுதியில் உள்ள கோப்ரி அருகே நேற்று முன்தினம் மாலை இந்த கடத்தல் சம்பவம் நடந்துள்ளது. கடத்தப்பட்டவர்கள் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தவர்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் கூறுகையில்,  “ஐந்து இந்தியர்கள் கடத்தப்பட்டதை உறுதிப்படுத்துகிறோம். மற்ற இந்திய பணியாளர்கள் அனைவரும் பமாகோ தலைநகருக்கு பாதுகாப்பாக மாற்றப்பட்டுள்ளனர்,” என தெரிவித்துள்ளனர்.

தற்போது ராணுவ ஆட்சியில் உள்ள மாலி, அல்-கொய்தா மற்றும் ஐஎஸ்ஐஎஸ் தொடர்புடைய பயங்கரவாத அமைப்புகள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதனால் நாட்டில் பாதுகாப்பு சூழல் மிக மோசமாகியுள்ளது.

மேலும், ‘குரூப் ஃபார் தி சப்போர்ட் ஆஃப் இஸ்லாம் அண்ட் முஸ்லிம்ஸ் (JNIM)’ எனும் அல்-கொய்தா சார்ந்த அமைப்பு தற்போது மாலி முழுவதும் கடுமையான எரிபொருள் தடையை விதித்துள்ளது. இதனால் பொருளாதார நெருக்கடியும் அதிகரித்துள்ளது.

கடந்த 2012ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து ஆட்சிக் கவிழ்ப்புகள் மற்றும் மோதல்களால் பாதிக்கப்பட்ட மாலியில், வெளிநாட்டவர்களை கடத்துவது வழக்கமாகி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், தென் கொரியா உள்ளிட்ட நாடுகள் தங்களது குடிமக்களை மாலியை விட்டு உடனடியாக வெளியேறுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளன.

Summary :
Al-Qaeda-linked militants abduct five Indians in Mali’s conflict zone. India launches urgent rescue efforts as security fears rise.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *