அதிர்ச்சியில் மதுரை மக்கள் – ஒருவாரத்தில் இடிக்கப்படும் அம்பிகா திரையரங்கம்! காரணம் என்ன?

0488.jpg

மதுரை: மதுரையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக 35 ஆண்டுகளாக செயல்பட்ட அம்பிகா திரையரங்கம் இடிக்கப்பட உள்ளது. இது மதுரை மக்களுக்கு பெரும் அதிர்ச்சியாகவும், nostagia-வாகவும் அமைந்துள்ளது.

சென்னையின் உதயம் திரையரங்குக்கு பிறகு – அம்பிகாவின் முடிவு

சமீபத்தில் சென்னையின் புகழ்பெற்ற உதயம் திரையரங்கம் இடிக்கப்பட்டது. அதேபோல் மதுரையின் முக்கிய திரையரங்கமான அம்பிகா சினிமாஸும் விரைவில் இடிக்கப்பட உள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மல்டிப்ளெக்ஸ் வருகை – ஒரு/இரண்டு ஸ்க்ரீன் திரையரங்குகளுக்கு பின்னடைவு

மதுரையில் கடந்த சில ஆண்டுகளில் மல்டிப்ளெக்ஸ் திரையரங்குகள் அதிகரித்துள்ளன. சிறந்த வசதிகளுடன் கூடிய கோபுரம் சினிமாஸ், வெற்றி சினிமாஸ் (மாட்டுத்தாவணி & வில்லாபுரம்), ரேடியன்ஸ் சினிமாஸ், ஐநாக்ஸ் போன்ற திரையரங்குகள் ரசிகர்களிடையே பிரபலமடைந்துள்ளன.இதனால் ஒரு அல்லது இரண்டு ஸ்க்ரீன் கொண்ட பழைய திரையரங்குகள் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

‘விடாமுயற்சி’ கூட கூட்டம் சேர்க்கவில்லை.

சமீபத்தில் அஜித் குமார் நடித்த ‘விடாமுயற்சி’ படம் வெளியானபோது கூட, முதல் நாளிலேயே பெரிய கூட்டம் காணவில்லை.
இது கடந்த சில ஆண்டுகளாக அம்பிகா திரையரங்கில் நிலவி வரும் சவாலாக மாறியுள்ளது.
மேலும் அருகிலேயே பிரியா காம்ப்ளக்ஸ், ஜாஸ் சினிமாஸ் போன்ற பெரிய திரையரங்குகள் இருப்பது, இதன் வருகையை மேலும் பாதித்துள்ளது.

வணிக வளாகமாக மாறும் அம்பிகா சினிமாஸ்

திரையரங்க உரிமையாளர்கள் தற்போது அம்பிகா திரையரங்கத்தை இடித்துவிட்டு, A-கிரேட் வணிக வளாகமாக மாற்ற திட்டமிட்டுள்ளனர்.
கடைசி ரிலீஸ் படம் வருகிற வெள்ளிக்கிழமை வெளியாகும், அதன்பிறகு ஒருவாரத்திற்குள் இடிக்கும் பணிகள் தொடங்கப்படும்.
வணிக வளாக கட்டுவதற்கான பணிகள் 18-24 மாதங்கள் வரை நீடிக்கும்.
“இது திரையரங்கம் அழிக்கப்படுவது அல்ல, புதுப்பிக்கப்படுவது என்று நாம் பார்க்க வேண்டும்” என்று திரையரங்க உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

அம்பிகா திரையரங்கத்தின் மரியாதைக்குரிய வரலாறு

மதுரையில் ஹாலிவுட் படங்களை அதிகம் திரையிட்ட திரையரங்குகளில் ஒன்றாக அம்பிகா பிரபலமாக இருந்தது.
Fast & Furious போன்ற படங்கள் பெரும்பாலும் அம்பிகா திரையரங்கில் மட்டுமே அதிக ரசிகர்களை ஈர்த்தன.
இந்த திரையரங்கம் இடிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியதிலிருந்து, மதுரை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

நினைவுகள் மட்டும் மீதமா?

மதுரை சினிமா ரசிகர்களுக்கு அம்பிகா திரையரங்கம் ஒரு தனிப்பட்ட இடம்.
“ஒரு காலத்தில் பெரிய கூட்டத்தைச் சந்தித்த இந்த திரையரங்கம், இன்று காலப்போக்கில் மறைந்து போகிறது” என்ற ரசிகர்களின் வருத்தம் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்படுகிறது.மதுரை மக்கள் நினைவுகளில் என்றும் வாழும் ‘அம்பிகா சினிமாஸ்


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *