You are currently viewing பாஜக தலைவர் யார்? : நாளை முடிவு!

பாஜக தலைவர் யார்? : நாளை முடிவு!

0
0

சென்னை வரும் அமித் ஷா.. பாஜக மாநிலத் தலைவர் யார் என்ற சஸ்பென்ஸ் உடையுமா?

தமிழ்நாடு பாஜகவின் மாநிலத் தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு கடந்த சில வாரங்களாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை சென்னைக்கு வருகை தரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே இருப்பதால், அரசியல் கட்சிகள் இப்போதே தேர்தல் வியூகங்களை வகுத்து வருகின்றன.

சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி அமித் ஷாவை சந்தித்தது கூட்டணி குறித்த யூகங்களை கிளப்பியுள்ள நிலையில், பாஜகவின் புதிய தலைவர் யார் என்ற விவாதம் சூடுபிடித்துள்ளது.

தற்போதைய தலைவர் அண்ணாமலையின் பதவிக்காலம் முடிவடைய உள்ளதால், அவருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா அல்லது புதிய தலைவர் நியமிக்கப்படுவாரா என்ற கேள்வி தீவிரமாக எழுந்துள்ளது.

நாளை மறுநாள் பல்வேறு கட்சி நிர்வாகிகள் மற்றும் அரசியல் முக்கியஸ்தர்களை அவர் சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.

அமித் ஷாவின் இந்த பயணத்தின்போது, தமிழக பாஜகவின் புதிய மாநில தலைவர் யார் என்பது இறுதி செய்யப்பட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

Summary:

Central Home Minister Amit Shah’s upcoming visit to Chennai has intensified speculation about who will be the next Tamil Nadu BJP state president. With the current president’s term ending and the 2026 state assembly elections approaching, the announcement is highly anticipated. Shah is scheduled to meet with party officials and political leaders, potentially revealing the new state president.

Leave a Reply