You are currently viewing அமித்ஷா வருகை: அண்ணாமலை விளக்கம்!

அமித்ஷா வருகை: அண்ணாமலை விளக்கம்!

0
0

அமித்ஷா சென்னை வருகைக்கும் பாஜக மாநில தலைவர் பதவிக்கும் சம்பந்தமில்லை- அண்ணாமலை

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை இரவு சென்னைக்கு வருகை தரவுள்ளார். இரண்டு நாட்கள் பயணமாக சென்னை வரும் அவர், கிண்டியில் அமைந்துள்ள ஒரு நட்சத்திர விடுதியில் தங்குகிறார்.

வெள்ளிக்கிழமை அன்று, தமிழக பாஜகவின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து அமித்ஷா ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். அப்போது, தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் யார் என்பது குறித்து விவாதிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், அமித்ஷாவின் வருகை குறித்து செய்தியாளர்கள் அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர் கூறியதாவது:

அமித்ஷாவின் சென்னை வருகைக்கும், பாஜக மாநிலத் தலைவர் பதவிக்கான நியமனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால், அதற்கான ஆயத்தப் பணிகளை ஆராய்வதற்காகவே அமித்ஷா சென்னைக்கு வருகிறார்.

இதற்கு முன்னதாக அவர் பீகார் மாநிலத்திற்கும் சென்று வந்தார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு ஆளுநருக்கு பின்னடைவு இல்லை. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எதற்காக சென்னை வருகிறார் என்பது குறித்து நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

பாமகவின் தலைவர் மாற்றம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, எதுவாக இருந்தாலும் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் நல்ல முடிவையே எடுப்பார்கள் என்று குறிப்பிட்டார்.

Summary  : Amit Shah’s Chennai visit fuels rumors of a BJP leadership change, which Annamalai denies, stating it’s for election planning. He also commented on other political matters, with official details of the visit pending.

Leave a Reply