இன்றைய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பா.ஜ.க. பங்கேற்காது- அண்ணாமலை
நீட் தேர்வு வந்த பிறகு, சாதாரண குடும்ப மாணவர்கள் கூட மருத்துவக் கல்வி பெறுகின்றனர். ஆனால், திமுக தங்கள் கல்லூரி வருமானத்திற்காக நீட்டை எதிர்க்கிறது.
ஆற்காடு வீராசாமி பண விவகாரத்தை ஒப்புக்கொண்ட பிறகும், ஸ்டாலின் நீட் எதிர்ப்பு நாடகம் போடுகிறார். அதனால், இன்றைய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பாஜக பங்கேற்காது.
பா.ஜ.க.வின் சார்பில் நீட் தேர்வு குறித்து தமிழக மக்கள் கேட்ட பல கேள்விகளுக்கு தி.மு.க. அரசு இன்னும் பதில் தரவில்லை. அந்த கேள்விகளை இன்று முதலமைச்சர் ஸ்டாலினிடம் மீண்டும் கேட்க விரும்புகிறேன். நீட் தேர்வை நாடு முழுவதும் அமல்படுத்தியது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு.
தி.மு.க. அரசுக்கு நீட் வேண்டாம் என்ற எண்ணம் இருந்திருந்தால், அவர்கள் உச்ச நீதிமன்றத்திற்கு சென்றிருக்க வேண்டும்.
டாஸ்மாக் ஊழல் விசாரணைக்கு தடை கேட்டும், கள்ளச்சாராய மரண விசாரணைக்கு முட்டுக்கட்டை போடவும் நீதிமன்றம் செல்லும் உங்கள் அரசு, ஆட்சிக்கு வந்து நான்கு வருடங்களாக நீட் தேர்வுக்காக நீதிமன்றம் செல்லாமல், தீர்மானம், அனைத்துக் கட்சிக் கூட்டம் என்று ஏன் நாடகமாடுகிறீர்கள்?
திமுக சொல்வது பொய்யான தகவல்; நீட் எதிர்ப்புக்கு ஆதாரம் இல்லை. நீட் வந்த பின் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிப்பது கூடியுள்ளது. நீட் இல்லாதபோது மிகக் குறைவான அரசு பள்ளி மாணவர்களே மருத்துவக் கல்வி பெற்றனர் என்ற உண்மையை ஸ்டாலின் மறைக்கிறார்.