பிரபல தொழில்நுட்ப நிறுவனம் Apple, 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தனது முதல் குறைந்த விலை MacBook மொடலை வெளியிடத் திட்டமிட்டுள்ளது.

‘J700’ என்ற குறியீட்டில் உருவாகும் இந்த புதிய மொடல் தற்போது சோதனை நிலையிலும், சப்ளையர்களுடன் தொடக்க உற்பத்தி கட்டத்திலும் உள்ளது.
இந்த புதிய MacBook மாணவர்கள், சிறு தொழில்கள், இணைய உலாவல், ஆவணங்கள் மற்றும் லைட் எடிட்டிங் போன்ற பணிகளுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ChromeOS இயங்குதளத்தில் இயங்கும் Chromebook களுக்கும், அடிப்படை Windows laptops களுக்கும் நேரடி போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய விவரங்கள்:
-
விலை: $699 (கல்வி தள்ளுபடிகளுடன்)
-
சிப்செட்: iPhone செயலி அடிப்படையில், M1 MacBook Air-ஐ விட மேம்பட்டது
-
திரை: 13.6-இன்ச் MacBook Air-ஐ விட சற்று சிறியது
-
வடிவமைப்பு: தற்போதைய MacBook மொடல்களிலிருந்து மாறுபட்டது
-
பேட்டரி ஆயுள்: iPad keyboard combo-வினைவிட நீண்டது
இது மூலம் Apple, தன்னுடைய ‘ப்ரீமியம் சாதனங்கள்’ என்ற பாரம்பரியத்தை மாற்றி, வளர்ந்து வரும் சந்தைகளில் புதிய இடத்தைப் பிடிக்க முனைந்துள்ளது.
இந்த குறைந்த விலை MacBook, மாணவர்கள் மற்றும் பொதுப் பயனாளர்களுக்கான சிறந்த விருப்பமாக உருவாகும் என தொழில்நுட்ப வட்டாரங்கள் கூறுகின்றன.
Summary :
Apple is set to launch an affordable MacBook in 2026 for $699, designed for students and small businesses, challenging Chromebooks and Windows laptops.









