You are currently viewing மறுபடியும் காப்பி சர்ச்சையில் அட்லி!

மறுபடியும் காப்பி சர்ச்சையில் அட்லி!

0
0

அட்லி படத்தின் போஸ்டர் கூட காப்பியா? – விமர்சிக்கும் நெட்டிசன்கள்

‘ராஜா ராணி’ படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் அட்லி. சமீபத்தில் இவர் இயக்கிய ‘ஜவான்’ திரைப்படம் உலக அளவில் மிகப்பெரும் வசூலை ஈட்டி, 1,100 கோடி ரூபாயைத் தாண்டி சாதனை படைத்தது.

இந்நிலையில், அடுத்ததாக அல்லு அர்ஜுனை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார் அட்லி. இந்த புதிய படத்தில் அல்லு அர்ஜுன் இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அல்லு அர்ஜுனின் 22-வது படமாகவும், அட்லியின் 6-வது படமாகவும் உருவாகும் இந்த கூட்டணியை முன்னிட்டு, #AA22xA6 என்ற ஹேஷ்டேக்குடன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஒரு விளம்பரப் போஸ்டரை வெளியிட்டிருந்தது.

ஆனால், இந்த போஸ்டர் புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்படமான ‘டூன்’ படத்தின் போஸ்டரை அப்படியே பிரதிபலிப்பது போல் உள்ளதாக இணையவாசிகள் கருத்து தெரிவித்து விமர்சித்து வருகின்றனர்.

அட்லி இயக்கும் படங்கள் பெரும்பாலும் பிற படங்களின் நகலாகத்தான் இருக்கும் என்ற விமர்சனம் தொடர்ந்து நிலவி வரும் நிலையில், அவருடைய புதிய படத்தின் போஸ்டரும் தற்போது காப்பி சர்ச்சையில் சிக்கியுள்ளது.

Summary:

Director Atlee, known for films like ‘Jawan,’ is facing criticism again, this time for the promotional poster of his upcoming movie with Allu Arjun. Netizens are drawing parallels between the #AA22xA6 poster released by Sun Pictures and the poster of the Hollywood film ‘Dune,’ reigniting the long-standing accusations that Atlee’s films often borrow heavily from other movies.

Leave a Reply