ரயில்களில் எடுத்துச் செல்லக் கூடாத பொருட்கள் என்னவென்று தெரியுமா?
சில பொருட்களை ரயில்களில் எடுத்துச் செல்ல தடை உள்ளது. அந்த வகையில், ரயில்வே அமைச்சகத்தின் உத்தரவுகளின்படி, பயணிகள் ரயில்களில் ஆபத்தான பொருட்களை எடுத்துச் செல்லக் கூடாது.
பயணத்தின் போது பட்டாசுகள் அல்லது எரியக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை நெருங்கி வருகிறது. இந்த நிலையில், நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர்.
இதனால் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆர்வமாக இருக்கின்றார்கள் . இதன் காரணமாக, ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதிகிறது .
இந்த சூழ்நிலையில், பலர் இனிப்புகள், உடைகள், பரிசு பொருட்களை தங்களுடன் எடுத்துச் செல்கிறார்கள். இவை அனைத்தும் ரயில்களில் எடுத்து செல்ல அனுமதிக்கப்படுகிறது.
ரயில்களில் எடுத்துச் செல்லக் கூடாத பொருட்கள் என்னவென்று பார்ப்போம் வாங்க.
பட்டாசுகள், மண்ணெண்ணெய், எரிவாயு சிலிண்டர்கள், அடுப்புகள், தீப்பெட்டிகள் மற்றும் சிகரெட்டுகள் ஆகியவற்றை ரயிலில் எடுத்துச் செல்லக் கூடாது.
இந்தப் பொருட்களால் தீ விபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதால் இதனை கண்டிப்பாக எடுத்து செல்ல கூடாது, இதற்கு தடை விதித்துள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்பு வழிமுறைகள்.
- எப்போதும் உங்கள் ரயில் டிக்கெட் மற்றும் அடையாள அட்டையை (ID Proof) உங்களுடன் வைத்திருப்பது அவசியம் .
- தனிப்பட்ட உடைமைகளை உங்களுக்கு அருகிலே வைத்திருக்க வேண்டும்.
- அதிகளவு பணத்தை எடுத்துச் செல்லாமல் முடிந்தவரை டிஜிட்டல் கட்டணங்களைப் பயன்படுத்துகள் .
- குழந்தைகளை பாதுகாப்பாக பார்த்து கொள்ள வேண்டும்.
- யாரிடமும் எதுவும் வாங்கி சாப்பிடாமல் இருப்பது நல்லது .
- ரயிலில் வெளியில் இருந்து உணவு வாங்குவதை தவிர்க்கவும். உறுதி செய்யப்பட்ட ஸ்டேஷன் கடைகளிலிருந்து அதாவது 15 நிமிடங்களில் நிறுத்தப்படும் ஸ்டேஷனில் மட்டும் உணவுகளை வாங்குங்கள்.
- தங்கம் ,வெள்ளி அணிந்து செல்பவர்கள் கவனமாகவும் ,பாதுக்காப்பவும் பயணியுங்கள்.
- ஸ்மார்ட் போன்களை பாதுகாப்பாக யூஸ் பண்ணுங்கள்.
பயணிகளின் பாதுகாப்பிற்கு ரயில்வே மிகுந்த முன்னுரிமை அளிக்கிறது.
அதனால்தான் எரியக்கூடிய பொருட்கள், ரசாயனங்கள், பட்டாசுகள், கேஸ் சிலிண்டர்கள் உள்ளிட்ட பொருட்களை ரயில்களில் எடுத்துச் செல்ல தடை விதித்துள்ளனர்.
Summary:
If you’re heading home by train this Diwali, travel smart and stay safe. Certain items are restricted or risky to carry during festive travel. Knowing what not to pack can save you trouble during security checks. Here’s a quick guide to ensure your Diwali journey stays smooth and joyful.