மகளிர் உலகககோப்பை சாம்பியன்களுக்கு பிசிசிஐயின் ரூ.51 கோடி பரிசு!

0135.jpg

இந்தியா மகளிர் உலகககோப்பை வென்ற மகிழ்ச்சியில், பிசிசிஐ (BCCI) மாபெரும் பரிசுத்தொகையை அறிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளர் தேவஜித் சைகியா வெளியிட்ட தகவலின்படி, உலககோப்பை சாம்பியனான மகளிர் அணிக்கு ரூ.51 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது:
“1983-ல் கபில் தேவ் தலைமையிலான ஆண்கள் அணி உலககோப்பை வென்றபோது, அது இந்திய கிரிக்கெட்டில் புதிய ஊக்கத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது. அதேபோல், ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான மகளிர் அணியும் இன்று அதே வரலாற்றை மீண்டும் எழுதியுள்ளது. அவர்கள் வென்றது கோப்பை மட்டும் அல்ல, அனைத்து இந்தியர்களின் இதயங்களும் தான்,” என அவர் பாராட்டினார்.

ஐசிசி பரிசுத்தொகையும் இணைந்து மொத்தம் ரூ.116 கோடி!

முன்னதாக, ஐசிசி தலைவர் ஜெய் ஷா மகளிர் உலககோப்பை பரிசுத்தொகையை 300% உயர்த்தி, 2.88 மில்லியன் டாலரிலிருந்து 14 மில்லியன் டாலராக உயர்த்தியிருந்தார்.

இதனையடுத்து, வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் மற்றும் ஆதரவு குழுவினருக்கான ரூ.51 கோடி பரிசை பிசிசிஐ வழங்குவதாக அறிவித்துள்ளது. இதன் மூலம், ஐசிசி வழங்கும் தொகையுடன் சேர்த்து மொத்தம் ரூ.116 கோடி பரிசுத்தொகை மகளிர் அணிக்கு கிடைக்க உள்ளது.

இந்த அறிவிப்பு இந்திய மகளிர் கிரிக்கெட்டிற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாகக் கருதப்படுகிறது.

Summary :
BCCI announces ₹51 crore prize for India’s Women’s World Cup champions, raising total reward to ₹116 crore including ICC share.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *