பிக்பாஸ் 9 நிகழ்ச்சியில் சர்ச்சைகள் தினந்தோறும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. இப்போது பார்வதியின் “முகத்திரை கிழிக்கப்பட்டது” என்ற விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 9, கடந்த 30 நாட்களாக ஒளிபரப்பாகி வருகிறது. வழக்கத்தை விட இந்த சீசனில் சமூக வலைதள பிரபலங்கள் பலர் கலந்து கொண்டுள்ளதால் நிகழ்ச்சி இன்னும் சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது.
நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் புதிய சண்டைகள் வெடிக்க, ரசிகர்கள் “இது பொழுதுபோக்கா அல்லது மனஅழுத்தமா?” என கேள்வி எழுப்புகின்றனர். குறிப்பாக வி.ஜே. பார்வதி மற்றும் திவாகர் ஆகிய இருவரும் நிகழ்ச்சியின் முக்கிய சர்ச்சை மையமாக இருப்பதாக நெட்டிசன்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
சமீபத்திய எபிசோடில், பார்வதி பிரஜினிடம் உரையாடும் போதே கையை வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பிரஜின், அவரது கையை தட்டி விட்டு விலகியுள்ளார். இதனை வைத்து பார்வதி, “என்னை இப்படி காட்டப் போகிறாரா?” என புலம்பி பேசினார்.
இதில் வியானா பார்வதிக்கு ஆதரவாக, “ஒரு தேசிய டிவியில் இப்படிச் சொன்னால் நாளைக்கு உன் பெயர் என்ன ஆகும்?” என கடுமையாகக் கூறி விவகாரத்தை மேலும் பெரிதாக்கினார்.
இதோடு, டாஸ்க் ஒன்றில் பனியனை அணியாமல், மைக்கின் மேல் போட்டு வைத்த வியானாவுக்கு பிக்பாஸ் நேரடியாக எச்சரிக்கை விடுத்தார். “மைக் எடுத்து, பனியனை அணியுங்கள்” என அறிவித்த பிக்பாஸ், வியானாவின் நடவடிக்கையை சரி செய்யும்படி சொன்னார். இதை கேட்ட வியானா “மாட்டிக்கிட்டோமே!” என்று அதிர்ச்சியடைந்தார்.
இப்படி தினமும் புதிய பிரச்சனைகளால் பிக்பாஸ் 9, சமூக ஊடகங்களில் ‘சண்டை சீசன்’ என ரசிகர்கள் கிண்டல் செய்கின்றனர்.
Summary :
Explosive drama unfolds in Bigg Boss 9 as Parvathy’s conflict with Viana and Prajin shocks viewers, sparking huge debate among fans.









