பிக்பாஸ் சீசன் 9 தற்போது சூடுபிடித்த நிலையில், வைல்டு கார்டு போட்டியாளர்கள் நுழைந்ததுடன் நிகழ்ச்சி மீண்டும் பரபரப்பாகியுள்ளது.

சமீபத்திய ட்ரோம் வீடியோவில், திவாகர் மற்றும் பார்வதி ஆகியோர் புதிய வைல்டு கார்டு போட்டியாளர்கள் குறித்து பேசும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
திவாகர் பேச்சில், “திவ்யா ரொம்ப போல்டா நினைச்சேன், ஆனா அவங்க அப்படி இல்ல. பெண்ணோட தனிப்பட்ட விஷயத்தையே அமித் ஓபனா பேசுறாரு!” என்று கூறியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பார்வதியும் தனது நேரத்தில் மற்ற போட்டியாளர்களை குறிவைத்து கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதனால், பிக்பாஸ் வீடு மீண்டும் சண்டைகளாலும் சர்ச்சைகளாலும் நிறைந்து, ரசிகர்கள் மத்தியில் “இது ரியாலிட்டியா இல்ல ஸ்கிரிப்ட்டா?” என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா சி.ஜே., ஆதிரை, கலையரசன் ஆகியோர் வெளியேறிய நிலையில், பிரஜின், சாண்ட்ரா, அமித், திவ்யா கணேஷ் ஆகியோர் வைல்டு கார்டாக நுழைந்து வீட்டின் சூழலை முற்றிலும் மாற்றியுள்ளனர்.
Summary :
Bigg Boss 9 gets tense after Diwakar’s remark about Amit discussing a woman’s private matter goes viral, stirring controversy among viewers.








