பிக் பாஸ் சீசன் 9–இன் 11ஆம் நாள் பல திருப்பங்களும் உணர்ச்சிகளும் கலந்த நாளாக அமைந்தது.

காலை அலாரம் அடித்தவுடன் அனைவரும் எழுந்தபோதிலும், எஃப்.ஜே. தூங்கிக் கொண்டிருந்தார். இதனால் நாய் குரைக்கும் சத்தம் முழங்கியது. ஆதிரை, எஃப்.ஜே.யை பாடச் சொல்லி கேட்க, அவர் “தொண்டை சரியில்லை” என மறுத்தார். அதற்கு ஆதிரை “அப்போ தோப்புக்கரணம் போடு” என்றபோது, முதலில் மறுத்த எஃப்.ஜே. பின்னர் செய்து விட்டார். இவர்கள் இருவருக்கிடையேயான வேடிக்கையான உரையாடல் பின்னர் சண்டையாக முடிந்தது.
இருவரையும் சமாதானப்படுத்திய வீட்டு தலைவர் துஷார், “டிசிப்ளின்” பற்றிய பிக் பாஸ் கண்டனத்துக்கு பின்னர் தனது தலைமை பதவியை இழந்தார். அதோடு, அடுத்த வாரத்திற்கான தலைமைப் போட்டியிலும் பங்கேற்க முடியாது என பிக் பாஸ் அறிவித்தார்.
மாஸ்க் டாஸ்க் மீண்டும் தொடங்கியதில், இறுதிப் போட்டியில் சபரி, கம்ரூதின், துஷார் மோதினர். இதில் சபரி தோல்வியடைந்து வெளியேற்றப்பட்டார். இதை பார்த்த பார்வதி மிகுந்த மகிழ்ச்சியுடன் ஆடிக் குதித்தார்.
பின்னர் நடைபெற்ற இறுதி சுற்றில் கம்ரூதின் வெற்றி பெற்று, அடுத்த வார நாமினேஷனிலிருந்து ப்ரீ பாஸ் பெற்றார்.
இரவு, பிக் பாஸ் வீட்டார் லக்சுரி டின்னரை சாப்பிட்டு கொண்டிருந்தபோது, சூப்பர் டீலக்ஸ் வீட்டார் உணவு சமைக்கவில்லை. இதனால் சுபிக்ஷா–வியானா, பிக் பாஸிடம் “நாங்கள் சமைக்கலாமா?” என்று கேட்டனர். இதற்கிடையில் ஏற்பட்ட குழப்பத்தில் சபரி, சுபிக்ஷா, எஃப்.ஜே. இடையே வாக்குவாதம் நடந்தது.
இறுதியில் சபரி அனைவரையும் சமாதானப்படுத்தி, “வீட்டுக்கு வந்தால் நீங்களே சமைத்து தருவீர்கள்; இங்க நாங்க தான் சமைக்குறோம்,” என கூறி மனம் திறந்து பேசினார்.
பிக் பாஸ் வீட்டில் நடந்த 11ஆம் நாள் நிகழ்வுகள் — சண்டை, சமாதானம், தலைவர் பதவி பறிப்பு, வெளியேற்றம் என அனைத்தும் ரசிகர்களுக்கு முழு எமோஷன்களுடன் கூடிய எபிசோடாக அமைந்தது.
அடுத்த நாள் என்ன திருப்பம் வரப்போகிறது என்ற ஆர்வத்தில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
Summary:
Bigg Boss Tamil Season 9, Sabari was evicted after a heated task, leaving Parvathy overjoyed.








