பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி, போட்டியாளர் வி.ஜே. பார்வதியை நகைச்சுவையாக கலாய்த்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இவ்வாண்டு பிக்பாஸ் சீசனில் சமூக வலைத்தள பிரபலங்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். ஆனால், தினமும் பிரச்சனைகள், சண்டைகள் என நிகழ்ச்சி முழுவதும் கலகலப்பாகவே நடைபெறுகிறது. இதில் பார்வதி மற்றும் திவாகரமே அதிகமாக சண்டைகளுக்குக் காரணம் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சனிக்கிழமை ஒளிபரப்பான எபிசோடில், “சண்டை நடக்கும் போது நான் குளித்துக் கொண்டிருந்தேன் சார், பார்க்கவே இல்லை,” என்று பார்வதி சொன்னார். இதற்கு பதிலாக விஜய் சேதுபதி, “பார்த்திருந்தா அந்த சண்டையிலேயே நீங்க முன்னிலையில இருப்பீங்க! இந்த வீட்டு அமைதி கலையறதுக்கே காரணம் நீங்க தானே!” என்று நகைச்சுவையாக சொன்னார்.
அதற்கு பார்வதி, “நான் இருந்திருந்தா அந்த சண்டை நடந்திருக்காது,” எனக் கூற, விஜய் சேதுபதி உடனே, “நீங்க இருந்திருந்தா மூவரையும் ஒவ்வொரு பக்கம் தூக்கி அடிச்சிருப்பீங்க!” என்று மீண்டும் நகைச்சுவையாக பதிலளித்தார்.
இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.
Summary :
Vijay Sethupathi playfully mocks VJ Parvathy in Bigg Boss Tamil 9, sparking laughter and viral reactions across social media.









