சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி, சண்டைகள் மற்றும் சச்சரவுகள் காரணமாக சூடுபிடித்துள்ள நிலையில், வார இறுதி எபிசோடுக்கான படப்பிடிப்பில் எதிர்பாராத சம்பவங்கள் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த முறை ஒரே வாரத்தில் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்றும், ஒருவரின் எவிக்ஷன் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்ததாகக் கூறப்படுகிறது.
அதிரடி இரட்டை எவிக்ஷன்
வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் எஃப்.ஜே மற்றும் துஷார் குறைவான வாக்குகள் பெற்றிருந்ததாக கூறப்பட்டது. இதனால் எஃப்.ஜே வெளியேறுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இறுதி நேரத்தில் துஷாருடன் சேர்த்து பிரவீனும் வெளியேற்றப்பட்டதாக தகவல் கசிந்துள்ளது.
இந்த முடிவு நிகழ்ச்சியில் இருந்தவர்களுக்கே கடைசி நேரம் வரை தெரியவில்லையாம். பிரவீன் நன்றாக விளையாடி வந்திருந்தாலும், அவர் எதற்காக வெளியேற்றப்பட்டார் என்பது இன்னும் புதிராகவே உள்ளது. ரசிகர்கள் “ஒவ்வொரு சீசனிலும் நன்றாக விளையாடுபவர்கள் பலியாடு ஆக்கப்படுகிறார்கள்; இந்த முறை பிரவீன்தான் பலியாகியிருக்கிறார்” என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சான்ட்ராவுக்கு குறும்படம் – விஜய் சேதுபதியின் பாராட்டு
இரட்டை எவிக்ஷனின் அதிர்ச்சிக்கிடையில், சான்ட்ராவுக்கு பிக் பாஸ் ஒரு ‘சீக்ரெட் டாஸ்க்’ வழங்கியிருந்தார். அந்த டாஸ்க்கை வெற்றிகரமாக முடித்த சான்ட்ராவுக்காக இந்த வாரம் ஒரு சிறப்பு குறும்படம் காட்டப்பட்டுள்ளது.
விஜய் சேதுபதி தானே இந்தக் குறும்படத்தை அறிமுகப்படுத்தி, சான்ட்ராவின் புத்திசாலித்தனமான விளையாட்டை பாராட்டியதாக நிகழ்ச்சியை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.
போட்டி சூடுபிடிக்கும் நாட்கள்
வைல்ட் கார்டு போட்டியாளர்கள் வீட்டுக்குள் நுழைந்ததிலிருந்து நிகழ்ச்சி இன்னும் தீவிரமாகி வருகிறது. துஷாரின் தலைவர் பதவி பறிப்பு, பிக் பாஸின் மன்னிப்பு அறிவிப்பு போன்ற சம்பவங்கள் ரசிகர்களிடையே பெரும் பேச்சுப்பொருளாகி வருகின்றன.
இப்போது பிரவீன் வெளியேற்றத்தால், எஞ்சியிருக்கும் போட்டியாளர்களிடையே போட்டி மேலும் கடுமையாகி, அடுத்த வாரங்கள் தீவிரமான டர்னிங்க் பாயிண்டாக மாறும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
Summary :
Bigg Boss Tamil 9 heats up with two surprise evictions. Praveen and Dushara exit; Sandra’s short film wins hearts as fans react online.








