பிக் பாஸ் சீசன் 9–இன் இந்த வார எலிமினேஷனில் போட்டியாளரான திவாகர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

8 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்து, தற்போது ஒளிபரப்பாகி வரும் 9-வது சீசன் மிகுந்த சர்ச்சைகளுடன் நடைபெற்று வருகிறது. யாரேனும் ஒருவரை “இவர் தான் நியாயமாக பேசுகிறார்” என்று சுட்டிக்காட்ட முடியாத அளவுக்கு, போட்டியாளர்கள் இடையிலான மோதல்கள் அடிக்கடி வெடிக்கின்றன. தொடர்ந்து சண்டையே நடந்துக் கொண்டிருக்கும் நிலையில், டாஸ்குகளை முடித்து விறுவிறுப்பான நிகழ்ச்சியை தரவில்லை என பார்வையாளர்கள் பலரும் குற்றஞ்சாட்டுகின்றனர்.
வைல்ட்கார்டாக நுழைந்த சாண்ட்ரா, பிரஜின், அமித், திவ்யா கணேஷ் உள்ளிட்டவர்களும் பழைய போட்டியாளர்களைப் போலவே சண்டைகளில் ஈடுபட்டு வருவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. திறமையானவர்களை வெளியே அனுப்பி, டி.ஆர்.பி.க்காக பிரச்சனைகள் ஏற்படுத்தும் கேரக்டர்களை வீட்டில் வைத்திருக்கிறார்கள் எனவும் ரசிகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நாள் வரை நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா சி.ஜே, ஆதிரை, பிரவீன் ராஜ் ஆகியோர் எலிமினேஷனில் வெளியேறியுள்ளனர். இதில், பிரவீன் ராஜ் வெளியேறியது கடும் எதிர்ப்பை கிளப்பியது. அவரது திறமை இருந்தும், திறமையற்ற பார்வதி, திவாகர் போன்றவர்கள் வீட்டில் இருப்பதாக பார்வையாளர்கள் குற்றம்சாட்டினர்.
இந்த நிலையில், இந்த வார எலிமினேஷனில் முதலில் கனி வெளியேறுவார் எனத் தகவல் பரவினாலும், தற்போது திவாகரே எலிமினேட் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. பிக் பாஸ் ப்ரோமோவில் நடிகர் விஜய் சேதுபதி ரெட் கார்டுடன் வந்த காட்சியால், திவாகரே வெளியேற்றப்பட்டார் என ரசிகர்கள் உறுதியாக கூறுகின்றனர். பல வாரங்களாக திவாகரை வெளியேற்ற வேண்டும் என்பது பார்வையாளர்களின் கோரிக்கையாக இருந்த நிலையில், அது தற்போது நிறைவேறி இருப்பதாகவும் தகவல்.
பிக் பாஸ் வீட்டில் “வாட்டர்மெலன் ஸ்டார்” என பேசப்பட்ட திவாகர், அடிக்கடி மற்ற போட்டியாளர்களை விமர்சித்து வந்தார். குறிப்பாக கானா வினோத்திடம், “உன் தகுதி என்ன? என் தராதரத்திற்கு நீ வருவியா? உன் லெவலுக்கு நான் பேச முடியாது” என்ற அவரது கருத்து பார்வையாளர்களை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியது. இதன் பின்னர் பலரும் திவாகருக்கு ரெட் கார்டு கொடுத்து அனுப்ப வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.
Summary :
Divakar is eliminated from Bigg Boss Tamil 9 after weeks of viewer backlash, with Vijay Sethupathi’s red-card entry confirming the exit.









