பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி தினந்தோறும் சண்டை, மோதல், வம்பு என பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இப்போது, கானா வினோத், திவாகர், வியானா, சுபிக்ஷா ஆகியோர் மத்தியில் ஏற்பட்ட ஒரு சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீபத்திய எபிசோடில், வீட்டு தலை போட்டியில் பார்வதி, சபரியிடம் கோபமாக கெட்ட வார்த்தை பேச முயன்றார். பின்னர் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாலும், அதனால் வீட்டில் பெரும் பதட்டம் ஏற்பட்டது. இதனிடையே, கம்ருதீன் மற்றும் திவாகர், பார்வதிக்கு ஆதரவாக நிற்பது ரசிகர்களிடையே விவாதமாகியுள்ளது.
நாமினேஷன் நடைபெறும் போது, கானா வினோத் பாடல் பாடியபோது, கம்ருதீன் “நீ பார்வதியை பார்த்து பாடுறியா?” என்று கேட்டு வாக்குவாதம் தொடங்கினார். அதற்கு சபரி அமைதியாக “நாமினேஷன் முடிந்த பின் பேசலாம்” என சமாதானப்படுத்தினார்.
ஆனால் அந்த நேரத்தில் திவாகர், வினோத்தை கடுமையாக தாக்கி, “நாகரீகம் தெரியாது, எப்போது எங்கு பேசணும் தெரியாது” என்று திட்டினார். இதனால் வினோத் மன உளைச்சலில் சிக்கினார்.
அடுத்த காட்சியில், வியானா சுபிக்ஷாவிடம் “கானா வினோத் கெட்ட வார்த்தை பேசினார்” என கூற, சுபிக்ஷா அதனை நம்பி வினோத்திடம் கேள்வி எழுப்பினார். அதற்கு வினோத், “நான் அப்படி பேசவே இல்லை, பேசினிருந்தால் பிக்பாஸ் சொல்லட்டும்” என பதிலளித்தார்.
இதனால், வியானா ‘சகுனி வேலை’ செய்து வீட்டில் குழப்பம் ஏற்படுத்தியதாக நெட்டிசன்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மேலும், “இதே கேள்வியை பார்வதியிடம் ஏன் கேட்கவில்லை?” என்றும் ரசிகர்கள் சுபிக்ஷாவை விமர்சித்து வருகின்றனர்.
இவ்வாறு பிக்பாஸ் வீடு மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில், ரசிகர்கள் “வியானா உண்மையிலேயே ஸ்ட்ராடஜி விளையாடுகிறாரா?” என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.








