பீகார் தேர்தலில் என்.டி.ஏ வெற்றி பெற்ற நிலையில், புதிய அரசு அமைப்பதற்கான அமைச்சரவை பங்கீடு குறித்து ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. பா.ஜ.க மற்றும் ஐக்கிய ஜனதா தளம் தலா 101 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளதால், இரு கட்சிகளுக்கும் சம அளவு அமைச்சர் பதவிகள் வழங்கப்படும் என ஆரம்ப முன்னேற்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது.

சிராக் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சிக்கு 2 அமைச்சரவை துறைகள் வழங்கப்படலாம். ராஷ்டிரிய லோக் மோர்ச்சா மற்றும் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா ஆகியவற்றுக்கு தலா 1 துறை வழங்கும் வாய்ப்பும் பேசப்படுகிறது.
இந்நிலையில், JDU எம்.எல்.ஏ.க்கள் இன்று பாட்னாவில் சந்திக்க உள்ளனர். அதன் பின் முதலமைச்சர் நிதீஷ் குமார் ஆளுநரிடம் ராஜினாமா செய்து புதிய அரசு அமைக்க உள்ளார். புதிய அமைச்சரவை சத்தியப்பிரமாணம் புதன் அல்லது வியாழன் நடைபெறலாம் என தகவல்.
இந்த தேர்தலில் பா.ஜ.க 89, JDU 85, LJP(RV) 19, HAM 5, RLM 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. 2020 தேர்தலுடன் ஒப்பிடும் போது, இம்முறை அமைச்சரவை பங்கீட்டில் முக்கிய மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
என்.டி.ஏ வெற்றிக்கு நிதீஷ் குமாரின் நன்மதிப்பு முக்கிய காரணம் என்பதால், அவர் மீண்டும் முதலமைச்சராக தொடர்வதில் பா.ஜ.க ஒருமித்த கருத்துடன் உள்ளது. ஆனால் துணை முதலமைச்சர் பதவிக்கான முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை.
Summary :
BJP and JDU may receive equal cabinet berths in the new Bihar government. Chirag Paswan could get two posts; other NDA allies may get one each.









