கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள கிச்ச்னர் (Kitchener) பகுதியில் பள்ளிப்பேருந்து கவிழ்ந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவம், பேருந்தில் பயணம் செய்த மாணவ–மாணவிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிச்ச்னர் வாட்டர்லூ கல்லூரியில் (Kitchener Waterloo Collegiate) படிக்கும் மாணவர்கள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சுற்றுலா செல்ல பள்ளிப்பேருந்தில் புறப்பட்டிருந்தனர்.
காலை 9.40 மணியளவில், பேருந்து லண்டன் (London) நகரை அண்மிக்கும் போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து பள்ளம் ஒன்றில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில், பேருந்தின் சாரதியான 52 வயது நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பேருந்தில் இருந்த 42 மாணவர்களில் பலர் சிறிய காயங்களுடன் தப்பினர்.
சில மாணவர்கள் தைரியமாக அவசரப் புறவழி கதவைத் திறந்து மற்ற மாணவர்களை வெளியே வரச் செய்ததாகத் தெரியவந்துள்ளது.
சாரதிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்திருக்கலாம் என ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்த நான்கு மாணவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
Summary :
A school bus in Ontario overturned, killing its driver and injuring students. Authorities launch probe into the tragic accident.








