சென்னை:
உலகின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான கேப்ஜெமினி (Capgemini) நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் உள்ள கேப்ஜெமினி அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர். தகுதி மற்றும் அனுபவம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலிப்பணியிடம்
பணி பெயர்: Mainframe Developer
தேவையான திறன்கள் (Skills)
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோருக்கு கீழ்க்காணும் தொழில்நுட்ப திறன்கள் அவசியம்:
-
Mainframe: COBOL, CICS, DB2, JCL, VSAM
-
File Manager, IBM JCL Utilities பற்றிய அறிவு
-
Agile / Rally குறித்து அனுபவம்
-
Scheduling Tools: TWS / CA7 பற்றிய நுண்ணறிவு
-
ServiceNow / Any Ticketing System Tool பற்றிய அறிவு
-
Insurance Domain அனுபவம்
-
Direct Client Interaction, Interpersonal Skills, Professional Approach ஆகியவை தேவை
அனுபவம்
-
குறைந்தபட்சம் 4 முதல் 12 ஆண்டுகள் வரை சம்பந்தப்பட்ட துறையில் அனுபவம் அவசியம்.
-
புதிய தொழில்நுட்பங்களை விரைவாக கற்கும் திறன் இருக்க வேண்டும்.
சம்பளம்
இந்த அறிவிப்பில் சம்பளம் குறித்து குறிப்பிடப்படவில்லை. ஆனால் தேர்வு செய்யப்பட்ட நபரின் திறமை மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் சம்பளம் தீர்மானிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பம் ஆன்லைன் மூலம் செய்ய வேண்டும். விண்ணப்பிக்கும் கடைசி தேதி அறிவிக்கப்படவில்லை, எனவே வேலை அறிவிப்பு எந்த நேரத்திலும் முடிவடையலாம். விருப்பமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்க பரிந்துரைக்கப்படுகிறது.
தேர்வு நடைமுறை
விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதி வாய்ந்தவர்கள் மட்டும் இண்டர்வியூவுக்கு அழைக்கப்படுவார்கள். தேர்வாகும் நபர்கள் சென்னையில் உள்ள கேப்ஜெமினி அலுவலகத்தில் நியமனம் செய்யப்படுவார்கள்.
இந்த வேலை, அனுபவமுள்ள ஐடி நிபுணர்களுக்கு சிறந்த தொழில் முன்னேற்ற வாய்ப்பாக கருதப்படுகிறது.
Summary :
Capgemini offers IT job openings in Chennai for Mainframe Developers with 4–12 years of experience. Apply online immediately before closing.








