You are currently viewing பாரம்பரிய சுவையில் புதுமையான ருசி – கேரட் ஜவ்வரிசி பாயாசம்!

பாரம்பரிய சுவையில் புதுமையான ருசி – கேரட் ஜவ்வரிசி பாயாசம்!

0
0

கேரட் பாயசம் செய்யும் முறை :

தேவையான பொருட்கள்:

3 கேரட்
50 கிராம் ஜவ்வரிசி
4 ஸ்பூன் நெய்
1/2 லிட்டர் பால்
7 ஸ்பூன் சர்க்கரை
4 ஏலக்காய்
முந்திரி தேவையான அளவு
திராட்சை தேவையான அளவு

அரைக்க :

6 முந்திரி
10 பாதாம்

செய்முறை:

ஒரு வானலியில் 2 ஸ்பூன் நெய் விட்டு முந்திரி திராட்சையை வறுத்து எடுத்துக் கொள்வோம். அதே வானலியில் கேரட்டை வறுத்து எடுத்துக் கொள்வோம். பிறகு இரண்டு ஸ்பூன் நெய் விட்டு ஜவ்வரிசியை வறுத்து கொள்வோம்.சூடான பாலை ஊற்றி நன்கு கலக்கி, ஜவ்வரிசி வெந்ததும் கேரட்டையும் சேர்த்து வேக வைத்துக் கொள்வோம்.ஒரு மிக்ஸி ஜாரில் ஊற வைத்த பாதாமை தோல் நீக்கி, முந்திரி பருப்பையும் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்து சேர்த்து கொள்வோம்.கடைசியாக வறுத்த முந்திரி திராட்சை, ஏலக்காய் தூள் சேர்த்து கலக்கி சூடாக சுவைத்தால் பாயாசம் சுவையாக இருக்கும்.

Summary:   This recipe details how to make a delicious and creamy carrot and sabudana (tapioca pearls) payasam. It involves roasting the ingredients, cooking them in milk, and adding a paste of nuts for richness, finished with fried nuts, raisins, and cardamom.

Leave a Reply