கொரோனா திரும்புகிறதா? சென்னையில் பதிவான புதிய வழக்குகள்! – Chennai Covid Case
Chennai Covid Case -சென்னையில் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து கண்காணிப்பில்; சென்னையில் மூவருக்கு உறுதி!
கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் பெருமளவு கட்டுக்குள் இருந்து வருகிறது.
இருப்பினும், கொரோனா வைரஸின் தீவிரத்தை மாநில பொது சுகாதாரத்துறை தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து வருகிறது.
காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு தவறாமல் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், நேற்று தமிழகம் முழுவதும் 32 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
இதில், சென்னையைச் சேர்ந்த இரு ஆண்கள் மற்றும் ஒரு பெண் என மொத்தம் மூவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தற்போது மூவரும் நலமாக இருப்பதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மேலும், தற்போது கண்டறியப்பட்டுள்ள தொற்று, பரவும் தன்மை கொண்ட தீவிரமான பாதிப்பு இல்லை என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதிபடக் கூறியுள்ளனர்.
தொடர்ந்து பொது சுகாதாரத்துறை தொற்று நிலவரத்தை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary:
Three individuals in Chennai, comprising two men and one woman, have tested positive for COVID-19.
This development comes as the Tamil Nadu public health department continues to closely monitor the COVID-19 situation in the state, which has largely been under control for the past two years.
The cases were detected among 32 tests conducted across Tamil Nadu.
The affected individuals have been promptly isolated and are receiving treatment in the hospital, with the public health department reporting that all three are currently in stable condition.
Authorities have also assured that the identified infection is not of a highly virulent strain.
The public health department has reiterated its commitment to actively monitor the infection status in the state.