டிட்வா பலவீனமானாலும் தாக்கம் தொடர்கிறது: சென்னையில் காலை முதலே கனமழை, பலத்த காற்று

269.jpg

சென்னையில் இன்று காலை முதலே இடைவிடாமல் மழை பெய்து வருகின்றது. இதனால் பல சாலைகளில் தண்ணீர் தேங்கி, போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படாததால், மாணவர்கள் மழையில் நனைந்தபடியே பள்ளிகளுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

டிட்வா புயலின் தற்போதைய நிலை

வங்கக்கடலில் உருவான டிட்வா புயல், இலங்கையைத் தாண்டி தமிழகம் அருகே கடலோரப்பகுதிகளை ஒட்டி வடமேற்கே நகரும் என முன்பே அறிவிக்கப்பட்டது. நேற்று இரவு வரை புயல் வலுவிழக்காமல் கடலோரப்பகுதிகளுக்கு நெருங்கியிருந்தாலும், மேகங்கள் இன்றி இருந்ததால் அதிகமான மழையை கொடுக்க முடியவில்லை.

இப்போது டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்தமாக பலவீனமடைந்துள்ளது. இது இன்று பிற்பகல் மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னைக்கு மிக அருகே ஆழ்ந்த காற்றழுத்தம்

தற்போது இது

  • சென்னைக்கு தென்கிழக்கே 90 கி.மீ.,

  • புதுச்சேரிக்கு தென்கிழக்கே 130 கி.மீ.,

  • கடலூர்–காரைக்காலுக்கு 130 கி.மீ.,

  • வேதாரண்யம் 240 கி.மீ.,

  • நெல்லூர் 200 கி.மீ. தொலைவில் உள்ளது.

டிட்வா உருவான ஆழ்ந்த காற்றழுத்தம் தற்போது தமிழகம்–புதுவை கடலோரப் பகுதிகளுக்கு 40 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ளது. இது அடுத்த இரண்டு நாட்கள் சென்னை அருகே நிலைத்திருக்க வாய்ப்பு உள்ளதால், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு மிக கனமழை வரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மழையால் ஏற்படும் பாதிப்பு

சென்னையில் காலை முதலே தொடர்ந்து மழை பெய்து வருவதால்,

  • சாலைகளில் தண்ணீர் தேக்கம்

  • போக்குவரத்து நெரிசல்

  • வாகன ஓட்டிகளுக்கும் பயணிகளுக்கும் சிரமம்
    உயர்ந்து வருகிறது. நகரம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசும் நிலை காணப்படுகிறது.

தமிழ்நாடு வெதர்மேன் கருத்து

தமிழ்நாடு வெதர்மேன் பிரதேப் ஜான் தனது பதிவில்,

  • டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்தமாக மாறிவிட்டது

  • இது புதன்கிழமை வரை சென்னைக்கு அருகே கடலில் உறையும்
    அதனால் அடுத்த இரண்டு நாட்களில் சென்னை நிச்சயம் மழை பெறும் என தெரிவித்துள்ளார்.

மழை அளவு – டிட்வா தாக்கம்

  • எண்ணூரில் நேற்று 51 மில்லிமீட்டர்

  • இன்று 49 மில்லிமீட்டர்
    மழை பதிவாகியுள்ளது. அடுத்த இரண்டு நாட்களும் மிதமான முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளது.

டிட்வா சென்னைக்கு அருகில் நிலைத்திருப்பதால்,

  • சென்னை

  • திருவள்ளூர்

  • காஞ்சிபுரம்

  • செங்கல்பட்டு
    மாவட்டங்களில் இன்று கனமழை–தீவிர மழை பெய்யக்கூடும்.

உள்மாவட்டங்கள்

டிட்வா வலுவிழந்து உள்நாட்டு பகுதிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதால்,
நீலகிரி, கோவை, ஈரோடு, டெல்டா மாவட்டங்கள், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை பகுதிகளில் அடுத்த 24 மணி நேரம் மிதமான மழை தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Summary :

As Didwa weakens into a deep depression near Chennai, the city sees continuous rain, strong winds and heavy-rain alerts for surrounding coastal districts.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *