சென்னை மெட்ரோ ரயில்வே லிமிடெட், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் வந்த நுரையீரலை மிகக் குறைந்த நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதில் சிறப்பான பங்கு வகித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை, பெங்களூருவில் இருந்து வந்த நுரையீரல் கன்சைன்மென்ட் மதியம் 2.07 மணிக்கு மீனம்பாக்கம் மெட்ரோ நிலையத்தை அடைந்தது. மெட்ரோ நிர்வாகத்தின் துரித ஒத்துழைப்புடன் மருத்துவக் குழுவினர் உடனடியாக மெட்ரோவில் ஏறினர். வெறும் 20 நிமிடங்களில், ஏழு நிலையங்களை கடந்து, 2.28 மணிக்கு ஏஜி–டி.எம்.எஸ் நிலையத்தை அந்த கன்சைன்மென்ட் அடைந்தது.
அதன் பின்னர், மருத்துவக் குழுவினர் கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் சென்றனர், அங்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை திட்டமிடப்பட்டிருந்தது.
மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், “இந்த அதிவேகப் போக்குவரத்து, வீடமைப்பு மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, 2023இல் திருத்தப்பட்ட மெட்ரோ ரயில்வே விதிகளின் கீழ் எளிதாக்கப்பட்டது. சாலை வழியாக சென்றிருந்தால் நேரம் வீணாகியிருக்கும் நிலையில், மெட்ரோவின் உதவியால் விலைமதிப்பற்ற நேரம் சேமிக்கப்பட்டது. இது அறுவை சிகிச்சையின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது,” என குறிப்பிடப்பட்டுள்ளது.
Summary :
Chennai Metro enabled a 20-minute organ transfer from airport to hospital, ensuring success of a critical lung transplant surgery.








