சென்னை:
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது 72வது பிறந்தநாளை இன்று உற்சாகமாகக் கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு, அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்களை சந்தித்து வாழ்த்துகளை பெறுகிறார்.
பொதுக்கூட்டம் & அரசியல் தலைவர்கள் வாழ்த்து
முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு, நேற்று சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டணிக் கட்சி தலைவர்கள் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதுபற்றி தனது எக்ஸ் பக்கத்தில் ஸ்டாலின்,
“நாம் தொடங்கிய உரிமைப் போரில் வெற்றி வரும்.
என் பிறந்தநாள் வாழ்த்தாக உறுதி கூறிய தோழமை கட்சித் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் நன்றி”
என்று தெரிவித்துள்ளார்.
நினைவிடங்கள் & மரியாதை செலுத்தல்
பெரியார், அண்ணா, கருணாநிதி நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்தினார்
“அண்ணா – கலைஞர் வழியில் ஆதிக்கத்தை வீழ்த்தி, இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்” என உறுதி”
அண்ணா அறிவாலயத்தில் பிரம்மாண்ட வரவேற்பு
முதல்வர் ஸ்டாலின் இன்று அண்ணா அறிவாலயத்திற்கு வருகை புரிந்து தொண்டர்களின் வாழ்த்துகளை பெற்றுக் கொள்கிறார். சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் சிற்றரசு தலைமையில் சிறப்புவிழா நடைபெறுகிறது.
கலைஞர் அரங்கில் அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் வாழ்த்து
கோபாலபுரத்தில் தாயார் தயாளு அம்மாள், சிஐடி நகரில் ராஜாத்தி அம்மாளிடம் வாழ்த்து பெறுகிறார்
நலத்திட்ட உதவிகள் வழங்குதல்
முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, திமுக சார்பில் தமிழகமெங்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
அரசியல், சமூக, தொண்டரணி என அனைத்து தரப்பினரும் பிறந்தநாள் விழாவை உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.