சமையலறையில் கரப்பான் பூச்சி தொல்லையா? வீட்டிலேயே எளிதாக விரட்டும் வழிகள்!

079.jpg

பல வீடுகளில் கரப்பான் பூச்சிகள் பெரும் தொல்லையாக மாறியுள்ளன. அவை உணவுகளை கெடுப்பதோடு மட்டுமல்லாமல், பல நோய்த்தொற்றுகளையும் பரப்புகின்றன. பெரும்பாலும் இரவு நேரங்களில் சுறுசுறுப்பாக இயங்கும் இப்பூச்சிகள், உணவு மற்றும் ஈரப்பதமுள்ள இருண்ட இடங்களில் தஞ்சம் புகுகின்றன. எனவே சமையலறை, குளியலறை, வடிகால்கள் போன்ற இடங்கள் அவற்றின் முக்கிய தங்குமிடங்களாகின்றன.

ஒருமுறை வீட்டுக்குள் நுழைந்தால் அவற்றை முற்றிலும் அகற்றுவது கடினம். ஆகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம் — வீட்டை சுத்தமாக வைத்தல், உணவு பொருட்களை மூடி வைப்பது, தண்ணீர் கசிவுகளை சரிசெய்வது போன்றவை. இதற்குபிறகு, இயற்கையாக கரப்பான் பூச்சிகளை விரட்ட சில எளிய வீட்டுவழி முறைகள்:

சமையல் சோடா + சர்க்கரை, சம அளவு சமையல் சோடா மற்றும் சர்க்கரை கலக்கி, கரப்பான் பூச்சிகள் அதிகம் நடமாடும் இடங்களில் வையுங்கள். சர்க்கரை அவற்றை ஈர்க்கும்; சோடா அவற்றின் செரிமானத்தை பாதித்து அழிக்க உதவும்.

பிரிஞ்சி இலைகளின் வாசனை கரப்பான் பூச்சிகளுக்கு பிடிக்காது. உலர்ந்த இலைகளை பொடியாக்கி அலமாரிகள் அல்லது சிங்க் அருகே தூவி வையுங்கள். இது இயற்கையான பூச்சி தடுப்பாக செயல்படும்.

சம அளவு வினிகர் மற்றும் தண்ணீர் கலவையால் சமையலறை மற்றும் சிங்க் பகுதிகளை துடைக்கவும். இது கரப்பான் பூச்சிகளை விரட்டுவதோடு, எண்ணெய் மற்றும் உணவு எச்சங்களை நீக்கும்.

போரிக் ஆசிட் மற்றும் சர்க்கரையை கலந்து கரப்பான் பூச்சிகள் வரும் இடங்களில் வையுங்கள். இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால், இது குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகளுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதால் கவனமாக பயன்படுத்தவும்.

வீட்டிலேயே இயற்கையான முறையில் கரப்பான் பூச்சிகளை விரட்டுவது எளிது. இத்தகைய சிறிய நடவடிக்கைகள் உங்கள் வீட்டை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும்.

Summary:

Learn simple, chemical-free ways to eliminate cockroaches from your home using natural ingredients like baking soda, sugar, and bay leaves. Stay safe and clean naturally.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *