You are currently viewing கோவை கோனியம்மன் கோவில் தேரோட்டம் – பள்ளிகளுக்கு விடுமுறை, போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

கோவை கோனியம்மன் கோவில் தேரோட்டம் – பள்ளிகளுக்கு விடுமுறை, போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

2
0

கோவை கோனியம்மன் கோவில் தேரோட்டம் இன்று (புதன்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு சிறப்பாக நடைபெறவுள்ளது. இதையொட்டி சுற்று வட்டார பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் வசதிக்காக காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை நகரத்தில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

விடுமுறை அறிவிக்கப்பட்ட பள்ளிகள்

கோனியம்மன் தேரோட்டத்தை முன்னிட்டு கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கீழ்க்கண்ட 24 பள்ளிகளுக்கு ஒருநாள் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். ஆனால், 11-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு வழக்கம்போல் நடைபெறும்.

  1. CCMA மகளிர் மேல்நிலைப் பள்ளி
  2. வீராசாமி முதலியார் உயர்நிலைப்பள்ளி
  3. புனித மைக்கேல்ஸ் மேல்நிலைப் பள்ளி
  4. சௌடேஸ்வரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
  5. SBOA மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
  6. புனித ஃப்ரான்ஸிஸ் மகளிர் உயர்நிலைப் பள்ளி
  7. புனித ஜொசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
  8. புனித மெரீஸ் மேல்நிலைப் பள்ளி
  9. புனித மைக்கேல்ஸ் மெட்ரிக் உயர்நிலைப் பள்ளி
  10. மில்டன் மெட்ரிக் பள்ளி
  11. ஷ்ருஸ்டி வித்யாலயா
  12. வாசவி வித்யாலயா
  13. மதர்லாண்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
  14. T.E.LC நடுநிலைப் பள்ளி
  15. ICC நடுநிலைப் பள்ளி
  16. நல்லாயன் தொடக்கப் பள்ளி
  17. மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளி (ஒப்பணக்காரர் வீதி)
  18. ஆர்.கே.ஸ்ரீ ரங்கம்மாள் மேல்நிலைப் பள்ளி
  19. மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி (VH ரோடு)
  20. CSI ஆண்கள் மேல்நிலைப் பள்ளி
  21. மன்பல் உலும் தொடக்கப் பள்ளி
  22. மன்பல் உலும் மேல்நிலைப் பள்ளி
  23. பிரசென்டேசன் கான்வென்ட் மகளிர் மேல்நிலைப் பள்ளி
  24. மாரன்னகவுண்டர் உயர்நிலைப் பள்ளி

போக்குவரத்து மாற்றம் – முக்கிய அறிவிப்புகள்

கோனியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெறுவதால் கோவை மாநகர போக்குவரத்து போலீசார் கீழ்கண்ட மாற்றங்களை அறிவித்துள்ளனர்:

மாநகருக்குள் வாகனங்களுக்குத் தடை

பேரூரில் இருந்து செட்டிவீதி, ராஜவீதி வழியாக மாநகருக்குள் செல்லும் வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளது.
மாற்று வழியாக அசோக்நகர் ரவுண்டானா, பேரூர் பைபாஸ் சாலை வழியாக உக்கடம் செல்லலாம்.

மாற்று வழிகள்

வைசியாள் வீதி, செட்டி வீதி வழியாக பேரூருக்கு செல்லும் வாகனங்கள் → உக்கடம், பேரூர் பைபாஸ் சாலை, அசோக் நகர் ரவுண்டானா, சிவாலயா சந்திப்பு வழியாக செல்லலாம்.
மருதமலை ரோடு & தடாகம் ரோட்டில் இருந்து தெலுங்கு வீதி வழியாக செல்ல தடை.
மாற்று வழியாக காந்திபார்க், பொன்னையராஜபுரம், சொக்கம்புதூர், ராமமூர்த்தி சாலை, சிவாலயா சந்திப்பு, செல்வபுரம் மாநகராட்சி பள்ளி வழியாக செல்லலாம்.
சுக்கிரவார்பேட்டை சாலையில் இருந்து தியாகி குமரன் வீதி வழியாக ராஜவீதிக்கு செல்ல தடை.
கனரக மற்றும் சரக்கு வாகனங்களுக்கு காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை நகருக்குள் நுழைவு தடை.

வாகன நிறுத்த வசதி

இருசக்கர வாகனங்கள் ராஜவீதி மாநகராட்சி வாகன நிறுத்துமிடத்தை பயன்படுத்தலாம்.
நான்கு சக்கர வாகனங்கள் கோனியம்மன் கோயில் எதிர்ப்புறம் உள்ள கார் பார்க்கிங் மற்றும் உக்கடம் காவல் நிலையம் அருகே உள்ள காலியிடத்தில் நிறுத்தலாம்.

பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

தேரோட்டம் நடைபெறும் போது பட்டாசுகள் வெடிக்கக் கூடாது.
அதிக ஒலியை எழுப்பும் ஊதுகுழல் போன்ற பொருட்கள் பயன்படுத்த தடை.
பாதுகாப்பு வளையத்தை மீறி தேரை நெருங்கினால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
கோனியம்மன் கோவில் தேரோட்டம் அமைதியாக நடைபெற பொதுமக்கள், பக்தர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என கோவை மாநகர போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Leave a Reply