வரும் 19வது ஐபிஎல் சீசனை முன்னிட்டு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்கவைத்த மற்றும் விடுவித்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், மொத்தம் 11 வீரர்கள் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்கள். இதனால், சிஎஸ்கே அணி ₹43.4 கோடி பணத்துடன் வரவிருக்கும் மின்ஏலத்தில் பங்கேற்க இருக்கிறது.

ஐபிஎல் 2025 ஏலத்துக்கான வீரர் பட்டியல் சமர்ப்பிக்க இன்று (நவம்பர் 15) கடைசி தினமாக இருந்த நிலையில், அனைத்து அணிகளும் தங்களது இறுதி பட்டியலை சமர்ப்பித்தன. வீரர் பரிமாற்ற (டிரேடு) செயல்முறையிலும் சில முக்கியமான மாற்றங்கள் நடந்துள்ளன.
சிஎஸ்கே – ராஜஸ்தான் ராயல்ஸ் டிரேடு: பெரிய பரிமாற்றம்
சென்னை அணி, தன்னுடைய முக்கிய வீரர்களான ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரன் ஆகியோரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வழங்கி, அந்த அணியின் கேப்டனான சஞ்சு சாம்சனை டிரேடிங் முறையில் பெற்றுள்ளது.
-
சஞ்சு சாம்சன் → சிஎஸ்கே (₹18 கோடி)
-
ஜடேஜா → ராஜஸ்தான் (₹14 கோடி)
-
சாம் கரன் → ராஜஸ்தான் (₹2.4 கோடி)
இந்த பரிமாற்றம் ரசிகர்களிடையே பெரும் பேசுபொருளாகியுள்ளது.
சிஎஸ்கே அணி தக்கவைத்த வீரர்கள் பட்டியல்
-
ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்)
-
ஆயுஷ் மத்ரே
-
டெவால்ட் ப்ரீவிஸ்
-
எம்.எஸ். தோனி
-
உர்வில் பட்டேல்
-
ஷிவம் துபே
-
ஜேமி ஓவர்டன்
-
ராமகிருஷ்ண கோஷ்
-
நூர் அகமது
-
கலீல் அகமது
-
அன்ஷுல் கம்போஜ்
-
குர்ஜப்னீத் சிங்
-
நாதன் எல்லிஸ்
-
ஷ்ரேயாஸ் கோபால்
-
முகேஷூத்
சிஎஸ்கே அணி விடுவித்த வீரர்கள்
-
ரவீந்திர ஜடேஜா
-
மதீஷா பதிரனா
-
டிவோன் கான்வே
-
ரச்சின் ரவீந்திரா
-
சாம் கரன்
-
ராகுல் திரிப்பாதி
-
தீபக் ஹூடா
-
விஜய் சங்கர்
-
ஷேக் ரஷீத்
-
அந்த்ரே சித்தார்த்
-
கமலேஷ் நாகர்கோட்டி
Summary:
CSK confirms Ruturaj as captain, retains key players, and releases 11 cricketers ahead of IPL 2025. Team heads to the auction with ₹43.4 crore.








