கடலூரில் கனமழை எச்சரிக்கை: எஸ்.ஐ.ஆர் படிவங்களை விரைந்து சமர்ப்பிக்க மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்

256.jpg

கடலூர் மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கான எஸ்.ஐ.ஆர் படிவங்களை தாமதிக்காமல் உடனடியாக பூர்த்தி செய்து, சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் ஒப்படைக்குமாறு மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான சி.பி. ஆதித்யா செந்தில்குமார் கேட்டுக்கொண்டார்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சித் பிரதிநிதிகளுடன் இன்று (27.11.2025) ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கலெக்டர் அவர் கூறியது:

04.11.2025 முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட கணக்கெடுப்பு படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்டு இணையத்தில் பதிவேற்றும் பணி முன்னெடுக்கப்படுகிறது. இதுவரை படிவங்களை திருப்பி அளிக்காதவர்களிடமிருந்து அவற்றை மீளப் பெறுதல், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் மேற்கொள்ளப்படுகிறது.

படிவங்களை பூர்த்தி செய்வதில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால், படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலரின் (BLO) தொலைபேசி எண்ணை அல்லது சம்பந்தப்பட்ட வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் உள்ள உதவி மையங்களை தொடர்பு கொள்ளலாம் எனவும் அவர் அறிவுறுத்தினார்.

கனமழை எச்சரிக்கையை முன்னிட்டு, வாக்காளர்கள் தங்களிடம் உள்ள படிவங்களை உடனடியாக பூர்த்தி செய்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இந்த செயல்முறையில் வாக்குச்சாவடி நிலை முகவர்களும் இணைந்து தேவையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

வாக்காளர்கள் பூர்த்தி செய்த படிவங்களை கையொப்பமிட்டு ஒப்படைத்ததும், அவர்களின் பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும். எனவே, அனைவரும் தேவையான ஒத்துழைப்பையும், பொறுப்புடனும் செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

Summary :

With heavy rain warning issued, the Cuddalore Collector has asked voters to promptly submit SIR forms to avoid delays in voter list updates.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *