அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு புயல் எச்சரிக்கை: கடல் சீற்றம் அதிகரிப்பு – மீனவர்களுக்கு எச்சரிக்கை!

0148.jpg

டெல்லி: வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தீவிரமடைந்து வருவதாகவும், அதனால் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் புயல் நிலை உருவாக வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நவம்பர் 2 ஆம் தேதி கிழக்கு மற்றும் மத்திய வங்கக் கடலில் உருவான இந்த தாழ்வுப் பகுதி, இன்று (நவம்பர் 4) மேலும் வலுப்பெறக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது வடக்கு–வடமேற்கு திசையில் நகர்ந்து, மியான்மர் மற்றும் வங்கதேச கடற்கரை நோக்கி செல்லக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதன் விளைவாக, அந்தமான் நிக்கோபார் தீவுகளையொட்டிய கடல் பகுதிகளில் கடும் காற்று மற்றும் பேரலைகள் ஏற்படும். மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும், படகு உரிமையாளர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் தீவுகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், நிலைமை சீராகும் வரை கடலில் எந்தவித பொழுதுபோக்கு நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாம் என வானிலை மையம் வலியுறுத்தியுள்ளது.

குறிப்பாக, அண்மையில் வங்கக் கடலில் உருவான ‘மொந்தா’ புயல் ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடந்தபோது மணிக்கு 110 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. இதனால் மசூலிபட்டினம், கிருஷ்ணா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை மற்றும் பலத்த காற்றால் சேதங்கள் ஏற்பட்டன.

Summary :
Cyclone alert issued for Andaman Islands as low pressure in Bay of Bengal intensifies. IMD warns of rough sea and strong winds; fishermen warned.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *