மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு இவற்றை எல்லாம் செய்து பார்க்கலாம் வாருங்கள்!

403.jpg

இரவு 9 மணியோ (அ) 10 மணியோ தினமும் சரியான நேரத்திற்கு தூங்கச்செல்லவேண்டும். படுக்கை அறையில் மொபைல் , டிவி என எலக்ட்ரானிக் பொருட்கள் வேண்டாம். மெல்லிய இசையைக் கேட்டு கொண்டே பிடித்த புத்தகத்தை இரண்டு பக்கங்களாவது வாசித்து விட்டு உறங்கலாம்.

தினமும் காலை 6 மணிக்குள் அதாவது சூரிய உதயமாகும் முன் எழுந்துவிட வேண்டும். எழுந்ததும் பல்துலக்கி உடனே ஒரு தம்ளர் குளிர்ந்த நீரை பருகலாம்.
காபி, புகையிலை, டீ, மது இவற்றினை அடியோடு தவிர்த்துவிட வேண்டும்.
காலையில் உடற்பயிற்சி செய்வது முதல்வேலையாக இருக்கட்டும்.
மாலையில் யோகா செய்யுங்கள். இதனை காலையிலும் செய்யலாம். மாலையில் எண்ணெயில் பொரித்த பலகாரங்களை தவிர்க்கவும். அதற்கு பதிலாக பழங்கள் , அவல் , பொரி , சுண்டல் என ஆரோக்கியமாக உண்ணவும். சர்க்கரை நோயாளிகள், உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்கள் இரவு உணவை மாலையை எடுத்துக் கொள்ள பழகலாம்.
இரவு உறங்க செல்லும் போது ஒரு தம்ளர் பால் , பழம் , ஒரு கைப்பிடி டிரைப்ரூட்ஸ் என்று உங்கள் உடல்நிலை அனுமதிக்கும் எதையாவது உண்ணலாம்.
இரவு உணவாக ஆவியில் வேக
வைத்தது , கஞ்சி என எளிதில் ஜீரணமாகும் உணவுகளை உண்ணவும்.
மசாலா , எண்ணெய் நிறைந்த ,பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்துவிட வேண்டும்.
உங்கள் படிப்பு (அ) வேலைக்கு அவசியமான ஒன்றினை தினமும் கற்றுக்கொண்டு எப்போதும் உங்களை அப்டேட்டாக வைத்து கொள்ளவும்.
எந்த இடத்திலும் முதலில் மற்றவர்கள் பேசுவதை காதுகொடுத்து கேட்க வேண்டும்.
உங்கள் நேரம், பணம் இரண்டும் உங்கள் வாழ்வின் சக்தி. அதனை எக்காரணம் கொண்டும் வீணடிக்க வேண்டாம். இரண்டும் திரும்ப கிடைக்காது.
எப்பொழுதும் சுகாதாரமாக இருங்கள்.
முகம் பளபளக்க மேக்கப்பை விட
புன்னகை செய்யுங்கள்,செலவில்லாத ஒப்பனை.
 பார்த்தாலே சண்டைபோடுபவர் போல இருப்பது உங்களுக்கும், உங்களை சுற்றி இருப்பவர்களுக்கும் நல்லதல்ல.
நல்ல காலை உணவு நல்ல நாளின் ஆரம்பம். பழம், ஓட்ஸ் போன்றவை உங்கள் காலை உணவினை சத்துள்ளதாக்கும்.
உடற்பயிற்சி என்பதனை அன்றாடம் 20 நிமிடமாவது செய்யுங்கள். சுறுசுறுப்பாய் இருப்பீர்கள்.
நாள் ஒன்றுக்கு 10,000 அடிகள் நடக்கவேண்டும்.
பட்ஜெட் அவசியம். சேமிப்பு என்பதே உங்களது மாதம் பட்ஜெட்டில் முதலிடம் இருக்க வேண்டும்.
ஏதாவது ஒன்றினை  தினமும் கற்றுக் கொள்ளுங்கள், மனதுக்கு மகிழ்ச்சியாய் இருக்கும்.
உங்கள் டேபிள், பீரோ இவற்றினை சுத்தமாய் முறையாய் வையுங்கள். குப்பைகூளம் போல் வைக்காதீர்கள்.
ஆக்கப்பூர்வமாக சிந்திக்க வேண்டும்.
உங்களுக்கென சிறிது நேரம் ஒதுக்கிக்கொள்ள வேண்டும்.
தவறான பழக்கவழக்கங்களை விட்டுவிடுங்கள். எதையும் எண்ணி வருந்தி மூழ்காதீர்கள். கலவையைப் போன்ற கொடிய நோய் எதுவுமில்லை.

Summary :
A practical guide to daily habits like proper sleep, exercise, healthy food, discipline, and positive thinking for a happy, stress-free life.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *