You are currently viewing தர்ஷன் மீது புகார்: அண்ணாநகரில் அடிதடி!

தர்ஷன் மீது புகார்: அண்ணாநகரில் அடிதடி!

0
0

பார்க்கிங் செய்வதில் தகராறு – நடிகர் மீது நீதிபதி மகன் போலீசில் புகார்

பிக்பாஸ் சீசன் 3 மூலம் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்த தர்ஷன், தனது பிரபலத்தின் உந்துதலோடு 2022-ல் வெளியான ‘கூகுள் குட்டப்பா’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார்.

அண்ணாநகரில் நேற்று நடந்த ஒரு சம்பவத்தில், பெண் ஒருவரும் நீதிபதியின் மகனும் காயமடைந்தனர். இருவரும் உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

இந்த நிலையில், நடிகர் தர்ஷன் மற்றும் அவரது நண்பர்கள் தன்னை தாக்கியதாக நீதிபதியின் மகன் ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதேசமயம், நடிகர் தர்ஷன் தரப்பிலும் எதிர் புகார் ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, இந்த இரு தரப்பு புகார்கள் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Summary:  Actor Darshan, known from Bigg Boss Season 3, is involved in a controversy following an altercation in Anna Nagar. The son of a judge has filed a police complaint alleging assault by Darshan and his friends. Darshan’s side has also filed a counter-complaint. Police are investigating both claims.

Leave a Reply