ஒளி, சந்தோஷம், இனிப்புகள், குடும்ப உறவுகள், சத்தமாய் ஒலிக்கும் பட்டாசுகள், வீட்டு வாசலில் மலரும் கோலம், எல்லாம் நம்ம நினைவில் வந்து விடும். இந்திய கலாசாரத்திலும் குறிப்பாக தமிழர்களிடமும் தீபாவளிக்கு ஒரு தனி அடையாளம் இருக்கு. ஆனா எப்போதாவது நாம யோசிச்சு பார்த்திருக்கோமா???? தீபாவளி ஏன் Celebrate பண்ணுறோம் என்று ?
இந்தக் கேள்விக்கு , ஆன்மீக பக்கம், கலாச்சார பழக்கவழக்கங்கள், பழமையான கதைகள், சமூக அங்கீகாரம், பொருளாதார முக்கியத்துவம், மற்றும் நம்ம வாழ்க்கையில அது எவ்வளவு ஆழமா கலந்திருக்கிறது என்பதைப் பார்க்கலாம்.
Diwali என்பது சாதாரண Festival இல்லை. இது ஒரு Emotional Bonding, ஒரு Cultural Thread, ஒரு Spiritual festival. வீட்டுக்குள் சுத்தம் செய்வது முதல் புதிய உடை வாங்குவது வரை எல்லாமே ஒரு காரணத்தோட நடந்துகிடக்குது. இனிப்புகள் சாப்பிடுறது வெறும் சுவைக்காக இல்ல அது “இனிமையான வாழ்க்கை”க்கு ஒரு சின்னம். பட்டாசு வெடிக்குறது பொழுதுபோக்கு மட்டும் இல்ல, அது “இருள் – தீமை” எங்கிருந்தாலும் ஒழிக்கற சின்னம்.
குழந்தைகளுக்கு இது ஒரு மகிழ்ச்சியின் திருவிழா. பெரியவர்களுக்கு இது ஒன்றிணைவு. மூத்தவர்களுக்கு இது மரபு. ஆன்மீக பார்வையில் இது ஒரு அறிவொளி.
அதுவும், தீபாவளி ஒவ்வொரு மாநிலத்துல ஒவ்வொரு விதமா கொண்டாடப்படுறது கூட வித்தியாசமா இருக்கும். உதாரணத்துக்கு, வட இந்தியாவில் ராமன் இலங்கை வெற்றி பெற்று அயோத்திக்கு திரும்பின நாள் நினைவாக தீபாவளி கொண்டாடப்படுகிறது. தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில், அசுரன் நரகாசுரன் வதம் நடந்த நாளை நினைவுகூர்ந்து தீபாவளி கொண்டாடப்படுகிறது. இரண்டிலும் ஒளி இருளை வென்றது தான் மையக் கருத்து.
தீபாவளியின் வரலாறும் கதைகளும்
இதன் கதையை சொல்லிக்கிட்டே போகலாம் , அது ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கதை. இந்தியாவின் சாஸ்திரங்கள், புராணங்கள், வரலாற்று நூல்கள் எல்லாம் தீபாவளி வரலாறை பதிவு செய்திருக்கின்றன.
நரகாசுரன் வதம்:
தமிழர்களுக்கே அதிகமாக தொடர்புடைய கதை நரகாசுரனின் வதம். அசுர அரசன். அவன் மக்கள் வாழ்க்கையை துன்பப்படுத்தினான். சத்தியத்தை ஒடுக்கினான். பெண்களையும் , சிறுமிகளையும் கடத்தினான். இறுதியில் மகாவிஷ்ணுவின் அவதாரம் ஆன கிருஷ்ணர், சத்யபாமையுடன் சேர்ந்து போரிட்டு அவனை வீழ்த்தினார். அந்த வெற்றி நாள் தான் தீபாவளி தினம்.
இந்த கதை நமக்கு என்ன சொல்கிறது என்றால் – எவ்வளவு வலிமையான தீமை இருந்தாலும் அது நல்லதின் முன்னால் நிலைக்க முடியாது.
ராமாயணத்தோட இணைப்பு:
வடஇந்தியாவின் புராணத்தில், ராமர் இலங்கையிலிருந்து சீதையை மீட்டுக் கொண்டு வந்து அயோத்தி நாட்டு மக்கள் அவரை வரவேற்ற நாள் . அந்த நாளில் அயோத்தி முழுவதும் மக்கள் விளக்குகள் ஏற்றி மகிழ்ந்தார்கள். அதனால் தான் ஒளித் திருவிழா என்று அழைக்கப்படுகிறது.
வாமனன் – மஹாபலி கதை:
மற்றொரு இடத்தில், குறிப்பாக கேரளா பகுதியில், மகாபலி அரசனை நினைவு கூர்ந்து திருவிழாவை மக்கள் கொண்டாடுகிறார்கள். மகாபலி நியாயம், அன்பு, சமத்துவம் கொண்டவன். ஆனால் வாமனன் அவனை பாதாளத்துக்கு அனுப்பிய நாளும் ஒரு வரலாறு.
ஜெயின சமயம் – மகாவீரர் நிர்வாணம்:
ஜெயினர்கள் தீபாவளியை வேறொரு காரணத்துக்காகக் கொண்டாடுகிறார்கள். மகாவீரர் (மஹாவீர ஜெயின்) நிர்வாணம் அடைந்த தினம்,அவருடைய ஆன்மீக சுத்திகரிப்பு நாளை நினைவு கூறுவதே அந்த வழக்கம்.
சிக்கள் – குரு ஹர்கோபிந்த் சிறைவிடுதலை:
சிக்கள் தீபாவளியை ‘பந்தி சோர் திவஸ்’ என்று அழைக்கிறார்கள். அவர்களுடைய குரு ஹர்கோபிந்த் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட நாள் அதே தீபாவளி நாளோடு ஒத்துப்போனதால் அந்த நாளையும் தீபாவளி விழாவாகக் கொண்டாடுகிறார்கள்.
வணிக முக்கியத்துவம்:
இந்திய பாரம்பரியத்தில் தீபாவளி என்பது “புதிய வருடம்” ஆரம்பம் போலக் கருதப்படுகிறது. அதனால் தான் வணிகர்கள் புதிய கணக்கு புத்தகம் தீபாவளி நாளில் தொடங்குவார்கள். “லஷ்மி பூஜை” நடத்தி, செல்வம், சுபீட்சம் வீட்டுக்கு வரவேண்டும் என்று நினைப்பார்கள்.
குடும்ப – சமூக இணைப்பு:
வரலாறு வெறும் கதை இல்ல. அது ஒரு சமூக ஒற்றுமையை உருவாக்கும் பண்டிகை. நண்பர்கள், உறவினர்கள், அயலவர்கள், அனைவரும் ஒன்றாகக் கூடும் நாள். அதனால் தான் தீபாவளி நாள் எப்போதும் வீட்டில் மட்டும் இல்லாமல் “ஒன்றாகக் கொண்டாடும் நாள்” என்று மாறிவிட்டது.
Summary: Deepavali is celebrated as the victory of light over darkness and good over evil. This article explains Deepavali en celebrate pannurom deepavali voda histry in tamil, highlighting its cultural, spiritual, and historical significance.