டிமான்ட்டி காலனி 3′ படத்தின் அப்டேட்!
2015-ல் வெளியாகி திகில் கிளப்பிய ‘டிமான்ட்டி காலனி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, எட்டு வருடங்கள் கழித்து அருள்நிதி நடிப்பில் வெளியான இரண்டாம் பாகமான ‘டிமான்ட்டி காலனி 2’ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வசூல் சாதனை படைத்துள்ளது.
ஆகஸ்ட் 15-ம் தேதி திரைக்கு வந்த இப்படம் விமர்சன ரீதியாகவும் பாராட்டைப் பெற்று 90 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்துள்ளது.
‘டிமான்ட்டி காலனி 2’ பெற்ற மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குனர் அஜய் ஞானமுத்து அடுத்த பாகத்தையும் உறுதி செய்துள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். ‘டிமான்ட்டி காலனி 3’ முந்தைய படங்களை விட பிரமாண்டமான பொருட்செலவில் உருவாகவுள்ளதுடன், ஜப்பானில் படப்பிடிப்பு நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது வெளியாகியுள்ள புதிய தகவலின்படி, இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், அடுத்த வருடம் திரைக்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.