சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற புதிய சுவையில் காலை உணவுகள்!

370.jpg

சர்க்கரை நோயாளிகளுக்கு மிகப்பெரிய சவால் என்பது என்ன உணவு உண்பது தான். வழக்கமாக தட்டு நிறைய சோறு, நான்கைந்து இட்லி , முறுகல் தோசை என்று மூன்று வேளை உணவுகளையும் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளாக உண்டு தான் சர்க்கரை நோய் விகிதம் நமது நாட்டில் அதிலும் உணவில் அரிசியை பிரதானமாக  கொண்ட  தென்னிந்தியாவில் அதிகம். சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதம் என்னவென்றால் உணவு மற்றும் வாழ்வியல் முறைகளால் இந்த நோயினை மூட்டைக் கட்டி அனுப்பி விடலாம்.

கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை குறைத்து , புரதம் மற்றும் கொழுப்பு, நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். இதன்மூலம் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதைக் குறைக்க இயலும். ஒவ்வொரு முறை உணவிலும் எந்தெந்த சத்துக்கள் உள்ளன என்று ஆராய்ந்து உண்ண முடியாது. அதற்கு பதிலாக சர்க்கரை நோயாளிகளுக்கேற்ற உணவுகள் செய்முறையை பட்டியலாக எடுத்து வைத்துக் கொண்டு அதனைக் கொண்டு ஒரு உணவுத் திட்டம் தயாரிக்கும் போது  உணவுக் கட்டுப்பாட்டைக் கடைபிடிக்க எளிதாக இருக்கும். வித்தியாசமான சுவையில் சில ரெசிபிகளைப் பார்ப்போம்.
காலிஃப்ளவர் ரொட்டி :
துருவிய காலிஃப்ளவர் -1 கப்
சீஸ் – 1/4 முதல் 1/2கப் வரை ருசிக்கேற்ப
உப்பு – தேவையான அளவு
மிளகுத்தூள் – 1 ஸ்பூன்
சீரகத்தூள் – 1 டீஸ்பூன்
முட்டை -1
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் துருவிய காலிஃப்ளவர் , முட்டை , மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து கலக்கவும்.
இதனை ரொட்டி போல தேங்காய் எண்ணெய் அல்லது நெய் 1 டீஸ்பூன் ஊற்றி சுட்டெடுக்கவும்.
கார்போஹைட்ரேட் இல்லாத காலிஃப்ளவர்  , புரதம் நிறைந்த  முட்டை என சர்க்கரை  நோயாளிகள் உண்ணத் தகுந்த உணவு. இரவு அல்லது காலை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.
தைராய்டு கோளாறுகள் உள்ளவர்கள் மட்டும் காலிஃப்ளவரை தவிர்க்க வேண்டும்.
காலிஃப்ளவர் ரைஸ் :
காலிஃப்ளவர் உதிர்த்தது -1 கப்
தேங்காய் எண்ணெய்
சீரகம் – 1 டீஸ்பூன்
இஞ்சி துருவல் -1 ஸ்பூன்
பூண்டு துருவல் -1 ஸ்பூன்
மிளகுத்தூள் -1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – 1 ஸ்பூன்
கொத்தமல்லி தழை
செய்முறை :
வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு சீரகம் சேர்த்து தாளித்து அதில் உதிர்த்த காலிஃப்ளவர் சேர்த்து வதக்கவும். இதனுடன் இஞ்சி பூண்டு துருவல் உப்பு , மிளகுத்தூள் , மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும். காலிஃப்ளவர் வேகும் அளவுக்கு லேசாக தண்ணீர் தெளித்து விடலாம். காலிஃப்ளவர் வெந்து வரும் போது கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

Summary :

Discover simple, low-carb breakfast options like cauliflower roti and cauliflower rice, ideal for diabetics to manage blood sugar and maintain a healthy diet.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *