14 வயதில் அறிமுகம், 16-ல் கர்ப்பம்: 15 வயது மூத்த நடிகருடன் திருமணம் – டிம்பிள் கபாடியாவின் திரை வாழ்க்கை திருப்பங்கள்!

0193.jpg

திரைத்துறையில் சிறுவயதிலேயே அறிமுகமாகி, பின்னர் காதல், திருமணம், பிரிவு என வாழ்க்கையில் பல ஏற்றத் தாழ்வுகளை சந்தித்தவர் நடிகை டிம்பிள் கபாடியா.

1957 ஆம் ஆண்டு மும்பையில் செல்வ செழிப்பு மிக்க குஜராத்தி குடும்பத்தில் பிறந்த டிம்பிள், இயக்குநர் ராஜ்கபூர் அவர்களின் ‘பாபி’ (1971) திரைப்படத்தின் மூலம் 14 வயதிலேயே ஹிந்தி திரையுலகில் அறிமுகமானார். முதல் படமே ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று, அவரது நடிப்பு விமர்சகர்களிடமும் பாராட்டைப் பெற்றது.

இதற்கிடையில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ராஜேஷ் கன்னா டிம்பிள் கபாடியாவை காதலிக்கத் தொடங்கினார். இருவரும் காதலில் விழுந்து, டிம்பிள் தனது 15 வயதில் ராஜேஷ் கன்னாவை திருமணம் செய்துகொண்டார். அப்போது ராஜேஷ் கன்னாவின் வயது 30.

திருமணத்துக்குப் பிறகு, தனது 16 வயதிலேயே டிம்பிள் கபாடியா கர்ப்பமாகினார். திருமணத்தின் பின் கணவர் அனுமதியின்மையால் 10 ஆண்டுகள் சினிமாவிலிருந்து விலகி இருந்தார். இவர்களுக்கு ட்விங்கிள் கன்னா என்ற பெண் குழந்தை பிறந்தது. ஆனால், இருவருக்கிடையேயான மனக்கசப்புகள் காரணமாக 1982 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.

பின்னர், டிம்பிள் கபாடியா மீண்டும் திரையுலகில் திரும்பி, அமிதாப் பச்சன், அனில் கபூர், சன்னி தியோல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பல வெற்றிப் படங்களில் நடித்தார். தமிழில் கமல்ஹாசன் உடன் இணைந்து நடித்துள்ளார்.

2020 ஆம் ஆண்டு, கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ‘டெனெட்’ திரைப்படத்தின் மூலம் ஹாலிவுட்டிலும் அறிமுகமானார். அவரது நடிப்பு சர்வதேச அளவிலும் பாராட்டைப் பெற்றது.

இப்போது அவரது மகள் ட்விங்கிள் கன்னா பிரபல பாலிவுட் நடிகையாக வலம் வருகிறார். தமிழில் நடிகர் பிரஷாந்த் உடன் ‘ஜோடி’ திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary :
From debuting at 14 to marrying Rajesh Khanna at 15, Dimple Kapadia’s inspiring journey spans love, fame, and global recognition.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *