இந்த வருட தீபாவளி திரையுலக ரசிகர்களுக்கு ஒரு பெரிய விருந்து ஆகும். தியேட்டர்கள் மட்டுமல்லாமல், ஓ.டி.டி தளங்களிலும் பல புதிய திரைப்படங்கள் ரிலீஸாக உள்ளன. எந்த படம் ரசிகர்களின் மனதை கவரப் போகிறது என்பதில் ஆவல் அதிகரித்து வருகிறது.
டீசல்
இயக்குநர் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி, வினய், சாய் குமார், கருணாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ள “டீசல்” திரைப்படம் நீண்டநாள் காத்திருந்த படம். வினய் காவல்துறை அதிகாரியாக வில்லனாக நடிக்கிறார். படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
டியூட்
இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் – மமிதா பைஜு ஜோடியாக நடித்துள்ள “டியூட்” ரொமான்ஸ் மற்றும் காமெடி கலந்த படமாக உருவாகியுள்ளது. சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். படம் அக்டோபர் 17 அன்று ரிலீஸாகிறது.
பைசன்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், பசுபதி, கலையரசன் நடித்துள்ள “பைசன்” பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ளது. சமூக பின்னணியுடன் கூடிய ஆக்ஷன் டிராமா இப்படம் தீபாவளி தினமான 17-ஆம் தேதி வெளியாகிறது.
கம்பி கட்டுன கதை
அறிமுக இயக்குநர் ராஜநாதன் பெரியசாமி இயக்கத்தில் நட்ராஜ் (நட்டி), சிங்கம்புலி நடித்துள்ள “கம்பி கட்டுன கதை” ஜாலியான காமெடி எண்டர்டெய்னராக வரவுள்ளது. இது கூட அக்டோபர் 17 அன்று திரையரங்குகளில் ரிலீஸாகிறது.
திரையரங்குகளுக்கு இணையாக, ஓ.டி.டி தளங்களிலும் பல சுவாரஸ்யமான படங்கள் வெளியாகவுள்ளன. எந்த படம் தீபாவளி ரேஸில் வெற்றி பெறும் என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
Summary :
This Diwali 2025, Tamil films like Diesel, Dued, Bison, and Kambi Kattuna Kadhai hit theatres and OTTs on October 17, promising an entertainment-packed festive weekend.