தீபாவளி ரஷ் ஆரம்பம் – டிக்கெட் விலை ராக்கெட் மாதிரி உயர்ந்தது!

t.png

தீபாவளி என்றாலே ஒளியும் மகிழ்ச்சியும் நிறைந்த காலம் தான். ஆனா இந்த ஆண்டோ, பலருக்கும் வீடு போகணும் என்பதிலேயே பெரிய சவால் வந்துருக்கு — பேருந்து டிக்கெட் விலை !

பொதுவா Festival season வந்தாலே bus ticket rates சில அளவுக்கு உயர்வது நாமெல்லாம் தெரிந்த விஷயம்.
ஆனா இப்போனோ, ஆம்னி பேருந்துகளின் டிக்கெட் விலை நேரே வானம் தொட்ட மாதிரி உயர்ந்திருக்குது!

ஆன்லைனில் டிக்கெட் தேடின பயணிகள் அதிர்ச்சி!

தீபாவளி விடுமுறை வந்து விட்டது, வீட்டுக்கு போகணும் என்று பலரும் இந்த வாரம் ஆன்லைனில் டிக்கெட் தேடியிருக்காங்க. ஆனா RedBus, Abhibus, MakeMyTrip மாதிரி Website-களில் சென்றவர்கள் சொல்லறாங்க –

“பொதுவா ரூ.700க்குக் கிடைக்குற டிக்கெட், இப்போ ரூ.2000 – ரூ.2500க்கு தான்!”

சென்னை–மதுரை, கோவை–சென்னை, திருச்சி–பெருங்குடி மாதிரி பாதைகளில் விலை மூணு மடங்கு உயர்ந்திருக்கு. சில luxury sleeper buses-ல , ரூ.4000க்கு மேல போயிருக்கு.

அரசு பேருந்துகள் – ஓட்டுனர், கண்டக்டர் களைப்பில்!

அரசு போக்குவரத்து கழகமும் (TNSTC & SETC) இதை எதிர்பார்த்து special services அறிவிச்சிருக்கு.
தீபாவளி crowd-ஐ கையாள பல கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுது.

ஆனா அந்த government bus tickets ஆன்லைன்லே நிறைவாகப் போயிட்டது.  ஆம்னி தான் ஒரே வழி!”னு மக்கள் போயிட்டாங்க. அதுதான் private bus operatorsக்கு வாய்ப்பு கிடைச்சது.

அந்த demand-ஐ பார்த்து, விலை உயர்த்திட்டாங்க. சிலர் dynamic pricing-னு (மாறும் விலை நிர்ணயம்) சொல்றாங்க – ஆனால் பயணிகளுக்கு இது dynamic shocking-காக மாறியுள்ளது

ஏன் டிக்கெட் விலை இவ்வளவு உயர்ந்தது?

Private bus owners சொல்லுற justification:

  • Fuel rate அதிகம்
  • Toll charges உயர்ந்தது
  • Demand அதிகம் (supply குறைவு)
  • Festival season extra crew, maintenance charges

ஆனா சில பயணிகள் கேட்கிறாங்க – “இது எல்லாம் சரி, ஆனா மூணு மடங்கு விலை உயர்த்துவது நியாயமா?”

இன்னும் சிலர் Twitter-ல் hashtag தொடங்கிட்டாங்க – #OmniBusLoot #DiwaliTravelScam மாதிரி viral ஆகுது.

டிக்கெட் இல்லாதவர்கள் – ரயில் பக்கம்:

பேருந்து டிக்கெட் விலை பார்த்த பயணிகள், இப்போ ரயில் டிக்கெட் தேட ஆரம்பிச்சுட்டாங்க.
ஆனா அதுவும் waiting listல போயிட்டது. அதனால் சிலர் BlaBla Car மாதிரி carpool apps பயன்படுத்த ஆரம்பிச்சாங்க. சிலர் நண்பர்களுடன் காரில் share பண்ணி போறாங்க – “பேருந்து விலைக்கே பெட்ரோல் போட்டு போயிடலாம்!”னு.

நெட்டிசன்களின் எதிர்வினைகள்

சோஷியல் மீடியா முழுக்க மக்கள் குரல் ஒலிக்குது.

  • பேருந்து டிக்கெட் வாங்கணும் என்றால், EMI திட்டம் போடணும் போல இருக்கு.
  • Diwali bonus-ஐ bus ticketக்கு தான் செலவு செய்யணும் போல இருக்கு!
  • “Festival time- ல enjoy பண்ணலாம்னு பாத்த , Omni bus rateல stress ஆகுதுதே !”

அந்த மாதிரி memes, screenshots, funny tweets எல்லாம் flood ஆகுது.

அரசு நடவடிக்கை?

Transport department இதைப்பத்தி ஏற்கனவே சில warning-கள் issue பண்ணிருக்குது. Extra fare வாங்கக்கூடாது, அதிக விலை வைத்தால் license ரத்து செய்யப்படும்-ன்னு. ஆனா practiceல அந்த control எவ்வளவு effectiveனு தெரியவில்லை. பலர் demand செய்றாங்க  “Government bus count-ஐ அதிகப்படுத்துங்க, private rate கட்டுப்படுத்துங்க!”

பயணிகளுக்கான என்னோட அட்வைஸ்

  1. Advance-ஆ plan பண்ணுங்க-Festival seasonக்கு 2 வாரம் முன்னாடியே tickets book பண்ணுங்க.

  2. Compare பண்ணுக Different apps (Redbus, Abhibus, etc.)ல rate check பண்ணுங்க.

  3. Avoid night rush: Peak days (முன் நாள், தீபாவளி நாள்) avoid பண்ணுங்க.

  4. Government buses prefer பண்ணுங்க: பாதுகாப்பானதும், விலையும் நியாயமானது.

  5. Carpool or train: Last minuteல் train seat கிடைக்கலனா, group travel consider பண்ணுங்க.

தீபாவளி – மகிழ்ச்சி, குடும்பம், வீட்டின் ஒளி, ஆனந்தம் நிறைந்த ஒரு காலம்.
ஆனா அந்த வீட்டுக்கு போகும் வழியிலேயே மக்கள் சிரமப்படுறது சின்ன சோகம்தான்.

பேருந்து டிக்கெட் விலை எவ்வளவு உயர்ந்தாலும், மக்கள் ஊருக்கு செல்வாங்க – “வீட்டுக்கு போகணும் என்ற ஆசை போகாது ” அந்த ஆசை தான் இந்த தீபாவளியின் உண்மையான ஒளி.

Summary:

With Diwali holidays approaching, bus fares across Tamil Nadu have skyrocketed. Private omni operators have hiked prices nearly threefold, citing fuel and demand. Passengers are outraged, turning to trains and carpools to reach their hometowns.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *