சென்னை:
வரவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் மொத்தம் 20,378 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ். சிவசங்கர் அறிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
“அக்டோபர் 16 முதல் 19 வரை பண்டிகைக்கு முன் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். அதேபோல், மக்கள் தங்கள் ஊர்களிலிருந்து திரும்புவதற்காக அக்டோபர் 21 முதல் 23 வரை 15,129 பேருந்துகள் இயக்கப்படும்,”என்று தெரிவித்தார்.மேலும் அவர் கூறியதாவது,
“தினசரி இயங்கும் 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 5,710 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். நான்கு நாட்களில் மொத்தம் 14,268 முறைப் பேருந்துகள் இயக்கப்படும். , பிற மாவட்டங்களிலிருந்து 6,110 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படும்,”என்றார்.
பயணிகளின் நெரிசலைத் தவிர்க்கவும், ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையைத் தடுக்கும் வகையிலும் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.