You are currently viewing DMDK Alliance Statement – தேமுதிகவின் முடிவு என்ன?

DMDK Alliance Statement – தேமுதிகவின் முடிவு என்ன?

0
0

கூட்டணி தொடர்பாக பா.ஜ.க. பேசியதா? – பிரேமலதா விஜயகாந்த் பதில் – DMDK Alliance Statement

தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையிலான கூட்டணி உறுதியாகியுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான கூட்டணியில் பாஜக வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் இணைந்துள்ளது. சென்னைக்கு வருகை தந்த பாஜகவின் மூத்த தலைவர் அமித் ஷா நேற்று அதிமுக – பாஜக கூட்டணியை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தினார்.

தற்போதைய அரசியல் சூழ்நிலையில், அதிமுக மற்றும் பாஜக கூட்டணி குறித்து உடனடியாக எந்தக் கருத்தும் தெரிவிக்க முடியாது. அது இரு கட்சிகளும் இணைந்து எடுத்த முடிவாகும்.

சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு காலம் இருப்பதால், கூட்டணி குறித்து நிதானமாக ஆலோசித்து முடிவெடுப்போம் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தே.மு.தி.க) அடுத்த ஆறு மாதங்களுக்கு கட்சியின் வளர்ச்சிக்கான பணிகளில் முழு கவனம் செலுத்தவுள்ளது. கூட்டணி குறித்து அதிமுகவோ அல்லது பாஜகவோ இதுவரை எங்களை அணுகவில்லை.

எந்தக் கூட்டணியில் இணைவது என்பது குறித்து தே.மு.தி.க இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை.

அதிமுக – பாஜக கூட்டணி குறித்த செய்திகளை நான் தொலைக்காட்சியில் பார்த்துதான் தெரிந்துகொண்டேன். அமைச்சர் பொன்முடியின் பேச்சு மிகவும் இழிவானது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துணிச்சலான முடிவெடுத்து பொன்முடியை கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கியுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளிலும் உட்பூசல்கள் நிலவுகின்றன.ஆனால், தே.மு.தி.க மட்டுமே உறுதியுடனும் தெளிவுடனும் செயல்பட்டு வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

Summary : DMDK Alliance Statement stats that, Premalatha Vijayakanth is not ready to take action immediately on this. She says there is 1 year time for Election. So DMDK will be slow down the process of Alliance with other parties for the Election.

Leave a Reply