மும்பை முதல் காஞ்சிபுரம் வரை: அனில் அம்பானி குழுமச் சொத்துகள் முடக்கம் – இ.டி அதிரடி

0137.jpg

அனில் அம்பானி குழுமத்தின் ரூ.3,000 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை (இ.டி) தற்காலிகமாக முடக்கியுள்ளது.

மும்பை, டெல்லி, நொய்டா, புனே, ஹைதராபாத், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட நகரங்களில் உள்ள வீடுகள், அலுவலகங்கள், நிலங்கள் என மொத்தம் 40 சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கை சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் (PMLA) பிரிவு 5(1) கீழ் மேற்கொள்ளப்பட்டது.

இ.டி-யின் தகவலின்படி, ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் (RHFL) மற்றும் ரிலையன்ஸ் கமர்ஷியல் ஃபைனான்ஸ் (RCFL) நிறுவனங்கள் மூலம் திரட்டப்பட்ட பொது நிதி, சட்டவிரோதமாக திசைதிருப்பப்பட்டதாக விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

2017–2019க்குள் யெஸ் வங்கி இந்நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான கோடிகள் முதலீடு செய்ததாகவும், பின்னர் அவை செயலிழந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும், மியூச்சுவல் ஃபண்ட் வழிகாட்டுதல்களை மீறி, பொதுமக்களின் முதலீட்டு நிதி மறைமுகமாக அனில் அம்பானி குழும நிறுவனங்களுக்கு சென்றதாகவும் இ.டி கண்டறிந்துள்ளது.

அத்துடன், கடன்கள் முன்னெச்சரிக்கைச் சோதனைகள் இன்றி வழங்கப்பட்டன, ஆவணங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டன என்பதையும் அமலாக்கத் துறை வெளிப்படுத்தியுள்ளது.

“குற்றப்பணத்தைத் தடமறிந்து பொதுமக்களுக்கு திருப்பி அளிப்பதே எங்கள் நோக்கம்,” என மத்திய ஏஜென்சி தெரிவித்துள்ளது.

Summary :
ED seizes ₹3,084 crore assets of Anil Ambani Group across India in PMLA case over alleged money laundering and fund diversion.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *