தோல்விகள் நிலையில்லாதது!!!

324.jpg

நாம் இவ்வுலகில் விரும்பாத  முக்கியமான விசயம் தோல்வி என்பதே.சிறுகுழந்தைக்கூட தோல்வியை விரும்புவதில்லை.
ஏனெனில் வெற்றியைப் போன்று வெறியையும் போதையையும் தோல்விகள் தருவதில்லை.
ஆனால் வெற்றியின் படிக்கட்டு தோல்வி தான்.

தோல்வி நல்லது:
வெற்றியை மகிழ்ச்சியாகவும்
தோல்வியை துன்பமாகவே நாம் உணருகிறோம்.ஆனால்
தோல்விகள் நமக்கு தரும் அனுபலப்பாடத்தை எந்த கல்லூரியில் சென்றும் படிக்க முடியாது. வாழ்க்கையையும் , நம்மை சுற்றி உள்ள உறவுகளையும் குறிப்பாக உணர்த்திக் காட்ட நமக்கு எல்லோருக்கும் ஒரு தோல்வி அவசியம்.
தோல்வி தரும் வலிமை:
தோல்விகள் மேலும் நம்மை மனதளவில் பக்குவப்படுத்துகின்றன , மன வலிமையை அதிகரிக்கும்.
நம் தலைக்கு ஆணவம் செல்லாது இருக்க தோல்விகள் நல்லது.
சிலர் தோல்வி பயத்தால் தேர்வுகள் போட்டிகள் எதையும் விரும்புவதில்லை . இளைஞர்கள் நேர்முகத்தேர்வுக்கு செல்வதற்கு பயப்படுவது உண்டு நிராகரிப்பு எனும் தோல்வி கண்டு பயம். ஆனால் மீண்டும் மீண்டும் தன்னை தேர்வுகளுக்கு முறையாக தயார் செய்யும் போது அங்கு ஒரு அறிவாளி உருவாகிறான். ஏதோவொரு முதலாளியின் தேவைக்கேற்ப தயாராகும் போது அவனது கனவுகளும் சாத்தியமாகிறது.
தோல்வி பயம் தேவையில்லை:
இன்று தோல்வியாய் தோன்றுவது
நாளை திரும்பி பார்க்கையில் ஒன்றுமில்லாததாய் போகும்
இன்று வெற்றியாய் தோன்றுவது உண்மையில் நமக்கு தரப்பட இருக்கிற சோதனையாக இருக்கும். எந்தவொரு வெற்றிக்கும் பின்னால் நிறைய தோல்விகள் இருக்கும்.
இன்னும் சொல்லப்போனால்
நாம் அனைவரும்
150 கோடி விந்தணுக்களுக்கு இடையே நடந்த மாபெரும் போட்டியில் வெற்றியடைந்தவர்களே
4 லட்சம் கருமுட்டைகளில் இருந்து சிறந்த ஒரு முட்டையில் இருந்து கருவானோம்
நமது படைப்பே இயற்கையின் பெரும் அதிசய நிகழ்வு .
இதில் தோல்விகளைக்கண்டு அஞ்சுவதும் அதற்காக துயரம் கொள்வதும் தேவையற்ற ஒன்று
இங்கு எதுவும் எப்போதும் நிரந்தரமில்லை.
வாழ்நாள் முழுவதும் வெற்றியோடு வாழ்ந்தவருமில்லை.
ஒரு தோல்வியால் வீழ்ந்தவருமில்லை.
இவ்வுலகில் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் பஸ தோல்விகளுக்கு இடையே சில வெற்றிகள் கிடைக்குமாறு தான் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தோல்விகள் தங்களோடு சேர்த்து வாழ்க்கைக்கான அடுத்த கட்ட திறவுகோல்களை கொண்டு வருகின்றன.
தோல்விகள் நம்மை சிந்திக்க உந்துகின்றன.தோல்விகள் தரும் சுய அலசல் வாழ்க்கைக்கு மிகவும் அவசியம்.
ஏன் தோற்கிறோம்?
எங்கே குறை இருக்கிறது?
நம் எண்ணத்திலா?
நாம் கொண்ட செயலிலா?
நம் உழைப்பிலா?
என்று சிந்திப்பதற்கு தோல்விகள் அவசியமாகிறது
மனிதன் தோற்றால் மட்டுமே மற்ற மனிதனை மனிதனாக மதிப்பான்.
தோற்காத மனிதனுக்கு சக மனிதனின் பிணி தெரியாது.
தோல்விகளை நேசிப்போம்
அகங்காரம் தரும் வெற்றிகளை
விட ஞானம் தரும் தோல்விகள் நல்லது தானே

Summary :
Failures build strength, wisdom, and humility. True growth comes by embracing setbacks, learning lessons, and turning failure into future success


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *