தீபாவளி என்றாலே நம் நினைவில் வருவது பட்டாசுகள், இனிப்புகள் , அதோடு சேர்ந்து காரசாரமான ஸ்நாக்ஸ். இனிப்பு மட்டும் சாப்பிட்டால் சலிப்பாகிவிடும், அதற்கிடையில் ஒரு மொறுமொறுப்பான காரம் சேர்த்தால் தான் முழு பண்டிகைக்கு சுவை கிடைக்கும்.
அந்த சுவையை உங்கள் வீட்டிலேயே அனுபவிக்க, இந்த தீபாவளி பலகாரம் பதிவு ஐந்தில் பார்க்கப் போகின்றோம். இந்த தீபாவளிக்கு அவசியமான Top 5 காரம் ஐட்டங்கள்.
ஒமப்பொடி, முறுக்கு, சேவ், தட்டை, மிச்சர் – இவை எல்லாம் நம் பாரம்பரிய தீபாவளி ஸ்நாக்ஸ்களின் அடையாளம். ஒவ்வொரு ரெசிபிக்கும் தனி நறுமணமும், தனி சுவையும் உண்டு. வீட்டிலேயே இவற்றை எளிதாகவும் சுத்தமாகவும் செய்யலாம் .
இனி தீபாவளியின் ஸ்பெஷல் கார எபிசோடு ஆரம்பிக்கலாமா?
1. ஒமப்பொடி (Omapodi):
தேவையான பொருட்கள்:
- கடலை மாவு – 2 கப்
- அரிசி மாவு – அரை கப்
- ஓமம் – ஒரு டீஸ்பூன் (நன்கு அரைத்தது)
- வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
- உப்பு – தேவைக்கேற்ப
- எண்ணெய் – பொரிக்க
செய்முறை:
எல்லா பொருட்களையும் சேர்த்து மென்மையான சப்பாத்தி மாவு போல் பிசக்கவும். ஒமப்பொடி வடிவம் கொண்ட இடியாப்ப அச்சில் வைத்து, சூடான எண்ணெயில் அழுத்தி போடவும். மிதமான தீயில் பொன்னிறமாக பொரித்து எடுத்து ,குளிர்ந்த பிறகு ஏர்டைட் டப்பாவில் போட்டு வைக்கலாம்.
குறிப்பு: ஒமம் சேர்ப்பதால் ஜீரண சக்தி அதிகரிக்கும், சுவையும் அருமையாக இருக்கும்!
2. முறுக்கு (Murukku):
தேவையான பொருட்கள்:
- அரிசி மாவு – 2 கப்
- உளுந்து மாவு – அரை கப் ( வேகவைத்தது )
- வெண்ணெய் – 2 டீஸ்பூன்
- எள் – 1 டீஸ்பூன்
- உப்பு – தேவைக்கேற்ப
- எண்ணெய் – பொரிக்க
செய்முறை:
எல்லா பொருட்களையும் சேர்த்து சிறிது தண்ணீருடன் மிருதுவான மாவாக பிசக்கவும். முறுக்கு அச்சில் வைத்து, எண்ணெயில் அழுத்தி வடிவம் போட்டு, மிதமான தீயில் பொன்னிறமாக பொரிக்கவும். குளிர்ந்ததும் டப்பாவில் சேமித்து வைக்கலாம்.
குறிப்பு: மாவு அதிகமாக கெட்டியாக இருக்கக் கூடாது, இல்லையெனில் முறுக்கு உடைந்து போகும்.
3. சேவ் (Sev):
தேவையான பொருட்கள்:
- கடலை மாவு – 2 கப்
- அரிசி மாவு – அரை கப்
- மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்
- உப்பு – தேவைக்கேற்ப
- வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
- எண்ணெய் – பொரிக்க
செய்முறை:
எல்லா பொருட்களையும் சேர்த்து தண்ணீருடன் மென்மையாக பிசக்கவும். சேவ் அச்சில் வைத்து எண்ணெயில் அழுத்தி விடவும். மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்.குளிர்ந்ததும் ஏர்டைட் டப்பாவில் போட்டு வைக்கலாம்.
குறிப்பு: மிளகாய்த் தூள் அளவை உங்கள் ருசிக்கு ஏற்றபடி மாற்றிக்கொள்ளலாம்.
4. தட்டை (Thattai):
தேவையான பொருட்கள்:
- அரிசி மாவு – 1 கப்
- கடலை பருப்பு – 2 டேபிள் ஸ்பூன் (கட்டியில்லாமல் கலந்தது )
- பட்டை பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
- வெண்ணெய் – 1 டீஸ்பூன்
- மிளகாய்த் தூள் – அரை டீஸ்பூன்
- உப்பு, கருவேப்பிலை, பெருங்காயம் – சிறிதளவு
- எண்ணெய் – பொரிக்க
செய்முறை:
எல்லா பொருட்களையும் சேர்த்து தண்ணீருடன் பிசக்கவும். சிறிய உருண்டையாக எடுத்து, பிளாஸ்டிக் மீது தட்டி தட்டை வடிவம் போடவும். எண்ணெயில் மிதமான தீயில் பொரித்து எடுக்கவும். பொன்னிறமாக வந்ததும் வடித்து வைக்கலாம்.
குறிப்பு: மாவு மிக மென்மையாக இருந்தால் தட்டை குருமுறுப்பாக வராது.
5. கார மிச்சர் (Kara Mixture)
தேவையான பொருட்கள்:
- ஒமப்பொடி – 1 கப்
- சேவ் – 1 கப்
- பூந்தி – 1 கப்
- வேர்க்கடலை – ½ கப்
- கருவேப்பிலை – சிறிதளவு
- மிளகாய்த் தூள், உப்பு – தேவைக்கேற்ப
- எண்ணெய் – வறுக்க
செய்முறை:
எல்லா பொருட்களையும் தனித்தனியாக பொரித்து வைக்கவும். கடைசியில் எல்லாவற்றையும் கலந்து மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து கலக்கவும். குளிர்ந்ததும் டப்பாவில் சேமிக்கலாம்.
குறிப்பு: சூடாக இருக்கும் போது கலந்தால் சுவை சமமாகப் பரவும்!
இந்த 5 கார ரெசிபிகள் உங்க தீபாவளிக்கு மொறுமொறுப்பான சுவையுடன் வீட்டை மகிழ்ச்சியாக்கும்.
அடுத்த எபிசோடில் இன்னும் சில ஸ்பெஷல் ரெசிபிஸ் Waiting… சோ ஸ்டே டியூன்.
Summary:
In this Diwali special Episode 5, enjoy the flavor of five traditional spicy snacks. From crispy Omapodi and Murukku to the all-time favorite Kara Mixture, each recipe adds joy to your celebration. These homemade treats are easy to make and full of authentic South Indian taste. Perfect for sharing with family and friends this festive season.