எடப்பாடி பழனிசாமி தாக்கு..! கோவையில் பாதிக்கப்பட்ட மாணவியை மீட்க 4 மணி 25 நிமிடம் தாமதம் ஏன்?

0165.jpg

கோவை கல்லூரி மாணவி மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு குறித்து, கோவை காவல் ஆணையர் சரவணசுந்தர் அளித்த விளக்கத்தை எதிர்த்து, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

அவரது “எக்ஸ்” பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

“ஞாயிற்றுக்கிழமை இரவு 11.20 மணிக்கு மாணவியின் நண்பர் போலீசாரை தொடர்பு கொண்டு உதவி கோரியதாகவும், 11.35 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மறுநாள் அதிகாலை 4 மணிக்கு தான் மாணவியைக் கண்டதாகவும் காவல் ஆணையர் கூறியுள்ளார்.

அதாவது, இரவு 11.35 மணி முதல் அதிகாலை 4 மணி வரை — நான்கரை மணி நேரத்துக்கும் மேலாக போலீசார் என்ன செய்துகொண்டிருந்தார்கள்? என்ற கேள்வி எழுகிறது,” என எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியிருப்பதாவது,
“குற்றவாளிகளை கைது செய்தோம் என்று பெருமை பேசும் முதல்வர் மு.க.ஸ்டாலின், தமது காவல்துறையால் சம்பவ இடத்திலேயே நான்கரை மணி நேரம் மாணவியைக் கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டதற்காக வெட்கப்பட வேண்டும்.

100 போலீசார் இணைந்து தேடுதல் நடத்தியதாக காவல் ஆணையர் சொல்கிறார். ஆனால், அந்த அளவுக்கு பெரிய தேடுதல் நடந்தும், சம்பவ இடத்திலேயே இருந்த மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது அதிர்ச்சி,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்:
“அங்கு இருந்தது சிறிய சுவரா, பெரிய சுவரா? அதனைத் தாண்டி சென்று 100 போலீசாரும் தேடவில்லை என்றால் அது காவல்துறையின் தவறல்லவா? இருள் சூழ்ந்த இடம் என்பதற்காக மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை என்ற விளக்கம் வெட்கக்கேடானது.

இவ்வளவு குறைபாடுகளுடன் செயல்படும் காவல்துறையை கொண்டிருக்கும் திமுக அரசு, ‘ஒரு மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வோம்’ என்று சொல்வது நகைச்சுவை போன்றது. முதலில், 4 மணி 25 நிமிடம் தாமதம் ஏன் ஏற்பட்டது என்பதை மக்களுக்கு விளக்குங்கள்,” என எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார்.

Summary :

Edappadi K Palaniswami criticizes the TN police for taking 4 hours 25 minutes to rescue the Coimbatore student, demanding CM Stalin’s explanation.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *