சென்னை: ‘அமரன்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி தனது அடுத்த படத்திற்காக தனுஷுடன் இணைந்துள்ளார். தனுஷின் 55வது படமாக உருவாகும் இந்த திரைப்படம் குறித்து இயக்குநர் சமீபத்தில் ஓர் நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.
தனுஷின் சமீபத்திய திரைப்படங்கள்
தனுஷ், தனது கடைசி இயக்கிய ‘ராயன்’ படத்தின் தோல்விக்கு பிறகு, ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற படத்தை இயக்கினார். ஆனால், ‘டிராகன்’ படத்தால் பெரும் போட்டி ஏற்பட்டதால், இந்தப் படம் பெரியளவில் பேசப்படவில்லை. தற்போது அவர் ‘குபேரா’ (தெலுங்கு) படத்தை முடித்துள்ளார், மேலும் ஆனந்த் எல். ராய் இயக்கும் ஒரு ஹிந்தி படத்திலும் நடித்து வருகிறார்.
அமரன் பட இயக்குநர் பேட்டி
அமரன் படத்திற்குப் பிறகு, தனுஷுடன் இணையும் ராஜ்குமார் பெரியசாமி, புதிய படத்தின் கதையை பற்றிப் பேசும் போது, “இந்தக் கதை தனுஷுக்காக எழுதியது இல்லை. ஆனால் அவர் மிகவும் ஆர்வமாக ஏற்றுக்கொண்டார்” என்று தெரிவித்துள்ளார்.
“தனுஷ் எந்தக் கதையாக இருந்தாலும் நடிக்கத் தயார் என்று கூறினார். அவர் எந்த விதமான கட்டுப்பாடுகளும் விதிக்கவில்லை. எனக்கு மிகப்பெரிய சுதந்திரம் அளித்தார். முதலில் இரண்டு கதைகளை அவரிடம் கூறினேன், அதிலிருந்து அவர் தேர்வு செய்தது உண்மை சம்பவம் அடிப்படையாக கொண்ட கதையாகும்” என்றார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் படத்தையும் உண்மை சம்பவங்களை மையமாகக் கொண்டு இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி, மீண்டும் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு பெரிய ஹிட் கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.