வசீகரம் என்பது அழகு சார்ந்த ஒன்று, அழகுணர்வோ ஆளுக்கு ஆள் மாறுபடும். ஒருவருக்கு அழகாக தெரியும் விஷயம் இன்னொருவருக்கு சுமாராக தெரியும்.
எல்லோரும் ஒப்புக்கொண்டு மயங்குகிற அழகை தேஜஸ் என்பார்கள் .

தேஜஸ் என்பது பிறக்கும் போதே நம்முடன் பிறந்து வருகின்ற ஒன்று கிடையாது. அழகு சாதன பொருட்களாலும் அதை அடைய முடியாது
தேஜஸ் என்பது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மறைந்திருக்கும் ஒரு காந்த ஒளி ஆகும். இது வெளிப்பட மனமானது அலைபாயாமல் இருக்க வேண்டும். மனதை எண்ணங்களே இல்லாமல் அடக்கி கட்டுபடுத்ததான் யோகம் தியானம் முதலியவற்றை பழகுகிறோம்.
மனதை தளும்பி கொண்டிருக்கும் ஒரு நீர் நிலையோடு ஒப்பிடலாம். அப்படி ஒரு நீர்நிலையில் எதையும் தெளிவாக பார்க்க முடியாது. ஒரு சிறு அசைவும் இல்லாத நீர் நிலையில் எட்டி பார்த்தல் நம் முகம் கண்ணாடியில் தெரிவது போல் தெளிவாக தெரியும்.
நம் மனதும் எந்த எண்ணங்களும் இல்லாமல் அலைபாயாமல் இருக்கும்போது, மனதை ஆட்டிப் படைத்த சக்தி கட்டுபடுத்த பட்ட நிலையில் உடம்பின் புறத்தில் பீறிட்டு செல்ல முயலும். அப்போது நமது தோலின் நிறம் எப்படி பட்டதாக இருந்தாலும் அது பொன்னை போல ஒளிரும். குறிப்பாக முகமும், கண்களும் ஒருவித ஒளிவந்து ஒட்டிக்கொண்டு மின்னுகிரமதிரி மின்னும், இதைத்தான் தேஜஸ் என்கிறோம்.
இதற்க்கு முகத்தில் விபூதி, சந்தானம், குங்குமம் தரிக்கும் பழக்கங்களும் துணை புரியும். நமது நெற்றியில் புருவ மையத்தில்தான் ஆக்கினை என்னும் சுடர் இருக்கிறது. இந்த சூடர் தீசுடர் போன்றதன்று. இது ஒருவித மிதமான வெப்பம். இதனால் அந்த பாகத்தில் ஒருவித கொழுப்பு கரைந்து திரவமாய் பரவியிருக்கும். இது ஞான திருஷ்டிக்கு எதிரானது. பளிச்சென்ற கண்ணாடியில் என்னை பூசினால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும். நாம் தரிக்கும் திலகங்கள் நீரில் குழைத்து பூசபடுவதாலும், அவை உறிஞ்சும் தன்மை படித்ததாலும் அந்த குணத்தால் புருவ ஆக்கினை கொழுப்பு என்னும் துர்நீர் உறிஞ்சப்பட்டு ஆவியாகிவிடும். இது ஒரு நாள் ஒரு முறை திலகம் இட்டுக் கொள்ளவதால் நிகழ்வதில்லை. வழக்கமான செயல் பாடக இருக்க வேண்டும்.
மஞ்சள் குங்குமத்துடன் திகழும் பல சுமங்கலி பெண்கள் முகம் பளிச்சென்று இருக்க இதுவே காரணம். இப்படி தியானம் திலகம் இரண்டிலும் தவறாமல் இருப்பவர்கள் முகத்தில் புத்தொளி புரளும் அதுதான் “தேஜஸ்”
Summary :
Tejas is an inner radiance that emerges from a calm mind, meditation, and disciplined living. It reflects as a natural glow on the face and eyes.








