எலும்புகளை பலமாக்கும் உணவு வகைகள் என்னவென்று இப்பதிவில் பாப்போம்மா!
மூட்டுகளில் வலி,எலும்பு முறிவில் கொண்டுபோய் விடும். பலவீனமான எலும்புகளோடும் வாழும் நடுத்தர ,முதிய வயது பெண்மணிகளை நாம் பார்த்திப்போம்.
எலும்புகளில் பலம் குறைவதற்கு பல்வேறு காரணங்கள் இருப்பினும் ,நம் அன்றாட உணவு பழக்கத்துக்கு இதில் பெரும்பங்கு உண்டு.
எலும்புகளும் உயிருள்ள திசுக்கள் தான்! அவற்றினுள்ளும் நரம்புகள் ,ரத்த நாளங்கள் முக்கியமாக ,ரத்த அணுக்களை உற்பத்தி செய்யும் மஞ்ஜை போன்றவை உள்ளன.
பழைய செல்கள் நீக்கப்பட்டு ,புதிய செல்களை உருவாக்குவது என ஒரு பெரிய சுழற்சி எலும்புகளில் நடந்துகொண்டே இருக்கும்.
பலமான பற்களுக்கும் ,எலும்புகளுக்கும் சுண்ணாம்புச் சத்து எனப்படும் கால்சியம் சத்து அவசியம் தேவை.
ஐம்பது வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 1000 மி .கி கால்சியமும் மற்றவர்களுக்கு 1200 மி.கி கால்சியமும் தினசரி அவசியம்.
மாதவிலக்கு நின்றுபோன பெண்களுக்கு 1500 மி.கி கால்சியம் சத்து தேவைப்படுகிறது. இதை ஒரு வேளைக்கு 500 மி.கி என பகிர்ந்து எடுத்துக்கொள்ளலாம்.
- ஒரு கப் பாலில் 300 கி கால்சியம் உள்ளது. பால் பிடிக்காதவர்கள் சீஸ் ,தயிர்,என எந்த வடிவிலேனும் பாலை சேர்த்து கொள்ளச் சொல்கிறது நவீன மருத்துவம்.
- சின்ன முள் கொண்ட மீன்களான நெத்திலி ,மத்தி ,சங்கரா ,வஞ்சிரம் ,கெளுத்தி போன்ற மீன்கள் எலும்புக்கு பலமளிப்பதோடு ,இதயநோய் வராமலும் காக்கும்.
- முள்ளங்கி ,கீரை,ப்ரோக்கோலி ,பசலைக் கீரை , புதினா ,கொத்தமல்லி ,கருவேப்பிலை போன்றவற்றில் கால்சியம் சத்து அதிகம். எனவே, வாரமிருமுறை கீரை ,மற்ற நாட்களில் புதினா,கொத்தமல்லி சட்னி என உங்கள் உணவு பழக்கத்தை மாற்றி கொள்ளுங்கள்.
- ராகி கஞ்சி ,பாலில் வேகவைத்த ஓட்ஸ் ( ஓட்ஸ் கஞ்சி ) போன்றவையும் கால்சிய சத்தை நமக்கு அள்ளித் தருகின்றன.இவற்றை காலை உணவாக எடுத்துக் கொள்ளலாம். பட்டாணியில் பொட்டாசியம் சத்து அதிகமிருப்பதால் ,இவை கால்சிய சத்தை நம் உடல் இழக்காமல் இருக்க உதவுகிறது.
- சோயா பாலில் தயாரான சோயா பனீர் ( டோஃபூ ) போன்றவற்றில் கால்சியம் சத்தோடு ஐஜோஃப்ளவோன்களும்( Isoflavones ) அதிகம் இருப்பதால் எலும்புகளில் அடர்த்தியை கூட்ட இவை உதவும்.
- எலும்புகளுக்கு மட்டுமின்றி தோலின் பாதுகாப்புக்கும் உதவுகிறது.
- அவல், ராகி ,பார்லி பழுப்பரிசி போன்றவை மெக்னீசியம் சத்து நிறைந்தவை. இவற்றை அதிகளவில் எடுத்துக் கொள்ளும்போது கால்சியச்சத்து நம் உடலில் சேர உதவுகிறது.
Summary:
Strong bones are built through the right nutrition and daily habits. This article lists powerful foods rich in calcium, vitamin D, and protein. From milk and greens to nuts and fish, each plays a vital role in bone health. Include these foods in your diet for lifelong strength and flexibility.