பிரான்சில் நபர் ஒருவர் வேண்டுமென்றே மக்கள் கூட்டத்துக்குள் காரை செலுத்தியதில் பலர் காயமடைந்துள்ளனர். சம்பவம் Saint Pierre d´Oléron என்ற சுற்றுலா இடத்தில் நேற்று (நவம்பர் 5) காலை நடந்தது.

சாட்சிகள் கூறுவதன்படி, அந்த நபர் “அல்லாஹூ அக்பர்” என சத்தமிட்டபடி திடீரென காரை மக்கள் கூட்டத்துக்குள் செலுத்தினார். பின்னர், கார் மீது தீவைக்க முயன்றதும், வாகனத்துக்குள் எரிவாயு சிலிண்டர்கள் இருந்ததும் போலீசாரால் கண்டறியப்பட்டது.
விரைந்து சென்ற போலீசார், அவர் எதிர்த்து நடந்ததால் டேசர் பயன்படுத்தி கைது செய்தனர்.
இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளனர். அவர்களில் நாடாளுமன்ற உறுப்பினர் பாஸ்கல் மார்கோவ்ஸ்கி அவர்களின் உதவியாளரான எம்மா வல்லைன் (22) தீவிர நிலையில் உயிர் போராட்டத்தில் உள்ளார். மேலும் இருவர் தீவிர சிகிச்சைப் பிரிவிலும், ஐந்து பேர் சாதாரண சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யார் அந்த நபர்?
விசாரணையில், தாக்குதல் நடத்தியவர் ஜீன் கிலோட் (Jean Guillot, 35) என்பவர் என தெரியவந்தது. அவர் ஒரு பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த வெள்ளையர்; இஸ்லாமிய மதத்தோடு எந்தத் தொடர்பும் இல்லை என்று போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அவர் ஏன் இவ்வாறு மத உணர்வுகளைத் தூண்டும் வகையில் நடந்தார் என்பது குறித்து தற்போது போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Summary :
A man drove his car into a crowd in Saint Pierre d’Oléron, France, injuring several. Police used a taser to arrest suspect Jean Guillot, 35.









