You are currently viewing பாரதிராஜாவுக்கு கங்கை அமரன் பாடல் பாடி  ஆறுதல்!

பாரதிராஜாவுக்கு கங்கை அமரன் பாடல் பாடி ஆறுதல்!

0
0

கண்ணீர் விட்ட பாரதிராஜாவுக்கு கங்கை அமரனின் பாட்டு மருந்து.

இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதி (48) கடந்த 25ஆம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.இவர் மணிரத்னத்தின் “பம்பாய்” படத்தில் உதவி இயக்குநராக தனது திரைப்பயணத்தைத் தொடங்கி, பின்னர் 1999ஆம் ஆண்டு தனது தந்தை பாரதிராஜா இயக்கிய “தாஜ்மஹால்” படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி பல படங்களில் கதாநாயகனாக நடித்தார்.

மேலும், ஷங்கரின் “எந்திரன்” படத்தில் உதவி இயக்குநராகவும் பணியாற்றியதுடன், “சமுத்திரம்”, “மகா நடிகன்”, “அன்னக்கொடி” போன்ற பல படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார்.

2023-ல் சுசீந்திரன் கதையில் ‘மார்கழி திங்கள்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான மனோஜ் பாரதி திடீரென காலமானார், இது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்த நிலையில், இயக்குநரும் இசையமைப்பாளருமான கங்கை அமரன் தனது மகனை இழந்து வாடும் பாரதிராஜாவை நேரில் சந்தித்தார்.

அப்போது, அவர்கள் இருவரும் பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டதுடன், கங்கை அமரன் பாரதிராஜா இயக்கிய படங்களில் தான் பாடிய பாடல்களைப் பாடி அவரை ஆறுதல்படுத்தினார்.

பாரதிராஜா அமைதியாக கங்கை அமரன் பாடுவதைக் கேட்டுக் கொண்டிருந்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

Summary:  Following the recent passing of his son, Manoj Bharathi, director Bharathiraja was visited by his friend and music composer Gangai Amaran. Amaran comforted a tearful Bharathiraja by reminiscing about old times and singing songs from Bharathiraja’s films that he had sung. A video of this touching moment has gone viral.

Leave a Reply