You are currently viewing மதிய உணவுக்கு புது ருசி – இதோ பூண்டு சாதம்!

மதிய உணவுக்கு புது ருசி – இதோ பூண்டு சாதம்!

0
0

 “5 நிமிடத்தில் ஆரோக்கியமான பூண்டு சாதம்” – ஒருமுறை இந்த பக்குவத்துல செய்து பாருங்கள்…

ஒரே மாதிரி மதிய உணவு சாப்பிட்டு அலுத்துவிட்டதா? இன்று புதுசா ஏதாவது வெரைட்டி ரைஸ் சாப்பிட ஆசையா?

பூண்டு சாதம் நல்ல காரமான சுவையுடன் சாப்பிட அருமையாக இருக்கும். சீக்கிரம் செய்து முடிக்கக்கூடிய இந்த ஆரோக்கியமான உணவு, குழந்தைகளுக்கு மதிய உணவுக்கு ஏற்றது.

தேவையான பொருட்கள்:

பூண்டு -150 g

மிளகு -30g

சீரகம் -30g

உப்பு தேவையான அளவு

நெய் -100ml

கருவேப்பிலை

செய்முறை :

சீரகத்தை நைசா பொடி பண்ணுங்க, மிளகை கொஞ்சம் கொரகொரப்பா அரைச்சுக்கோங்க. பூண்டு சாதத்துக்கு நல்ல ருசி வேணும்னா, பூண்டையும் கல்லுப்பையும் சேர்த்து தட்டி எடுத்து வச்சுக்கோங்க.

நெய்யை சூடாக்கி, இடித்த பூண்டை பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின் மிளகு, சீரகம், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து நன்கு கிளறி விடவும், சுவையான தாளிப்பு ரெடி!

இதையடுத்து, சூடான சாதத்தைப் போட்டு நன்கு கலக்கினால், சுவையான, சத்தான பூண்டு சாதம் ரெடி! குழந்தைகளுக்கு அப்படியே கொடுத்தால் விருப்பமா சாப்பிடுவாங்க.

Summary: This recipe introduces Poondu Sadam (Garlic Rice) as a flavorful and healthy alternative to regular lunch. It’s described as spicy, quick to prepare, and suitable for children’s lunch boxes.

The recipe involves sautéing crushed garlic in ghee, adding coarsely ground pepper and finely powdered cumin, curry leaves, and salt, then mixing it with hot cooked rice.

Leave a Reply