வரலாற்றில் இதுவே முதன்முறை.. புதிய உச்சத்தில் தங்கம் விலை.. மக்கள் அதிர்ச்சி!
2025-ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் தங்கம் விலை முன்னெப்போதும் இல்லாத உயர்வைச் சந்தித்துள்ளது. இன்று மட்டும், ஒரு கிராம் தங்கத்தின் விலை ₹185 அதிகரித்து ₹8,745-ஆகவும், எட்டு கிராம் (ஒரு சவரன்) தங்கத்தின் விலை ₹1,480 உயர்ந்து ₹69,960-ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல், 18 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு ₹155 உயர்ந்து ₹7,245-க்கும், ஒரு சவரன் ₹1,240 உயர்ந்து ₹57,960-க்கும் விற்பனையாகிறது. இந்த விலை உயர்வு தங்கத்தின் வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
தங்கத்தின் விலையில் இவ்வளவு ஏற்ற இறக்கம் ஏன்? அமெரிக்கா புதிய வரிகளை விதித்ததால் பணவீக்கம் அதிகமாகும் வேகம் கூடியுள்ளது. டிரம்ப் பரஸ்பர வரியையும், வாகனங்களுக்கான வரியையும் போட்டிருக்கிறார்.
இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளது. உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றன. தங்கத்தின் ETF-களிலும் முதலீட்டாளர்களின் ஈடுபாடு அதிகரித்துள்ளது.
இதன் விளைவாக, அந்த சமயத்திலும் தங்கம் கணிசமான வளர்ச்சியைப் பெற்று, 27 சதவீதத்துக்கும் மேலான ஏற்றத்தைப் பதிவு செய்தது.
உலகம் முழுவதும் நிலவும் பொருளாதார மற்றும் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில், தங்கம் மீண்டும் ஒரு நம்பகமான முதலீடாக ஜொலிக்கிறது. இப்படியே நிலைமை நீடித்தால், தங்கத்தின் விலை கூடிய விரைவில் உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.